Specials Stories

“D.இமான் என்கிற “இசை சக்திமான்”

Imman

“சக்திமான்” எப்படி குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குமோ அது மாதிரி தான் ஆறிலிருந்து, அறுபது, எழுவது,… நூறு வரை இருக்க எல்லாருக்கும் பிடிச்ச இசையமைப்பாளரா இருக்காரு “D. இமான்”.

“கிருஷ்ணதாசி” சீரியல்க்கு இசையமைக்க ஆரம்பிச்சு, “காதலே சுவாசம்”, “தமிழன்” படம் மூலமா தமிழ் சினிமாக்குள்ள வந்து தன்னோட இசையால கும்முறு டப்பறனு கலக்கிட்டு இருக்காரு “D. இமான்”.

தமிழ் சினிமால ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் ஆகுற படங்கள்ல குறைஞ்சது ஒரு படமாவது “இமானோட” இசைல ரிலீஸ் ஆகியிருக்கும். அந்தளவு தன்னோட கடின உழைப்பால இன்னைக்கு தமிழ் சினிமால தவிர்க்க முடியாத இசையமைப்பாளரா உச்சம்தொட்டு இருக்காரு.

இமானோட இசை பயணத்துல மிகப்பெரிய ப்ரேக் கொடுக்தது “மைனா” திரைப்படம் பட்டி, தொட்டி, சிட்டினு எல்லாரையும் திரும்பி திரும்பி அந்த பாடல்கள கேக்க வச்சுது. ஆனாலும் மைனாக்கு முன்னாடியே விசில், தமிழன், தலைநகரம், ரெண்டு, மருதமலை, மாசிலாமணி, கிரி, திருவிளையாடல் ஆரம்பம்னு பல படங்கள்ல இமானோட பாடல்கள நாம ரசிச்சு கேட்டுருக்கோம், சிலருக்கு அது இமான் இசைனு தெரியாம கூட இருந்திருக்கு.

“மைனா” படம் மூலமா இமானுக்கு தேசிய விருது கிடைக்கும்னு என்னைய மாதிரி பல இசை ரசிகர்கள் எதிர்பார்த்தாங்க, அப்போ கிடைக்கல! சரி “கும்கி “க்கு எதிர்பார்த்தோம், அப்பவும் கிடைக்கல! ஆனா யாரும் எதிர்பார்க்காத நேரத்துல “இமான்” இசைல அஜித் ரசிகர்கள் கொண்டாடினா விஸ்வாசம் படம் தான் D.இமானுக்கு தேசிய விருத “அடிச்சு தூக்கி” தந்திருக்கு.

இயக்குனர்கள் இமான்கிட்ட Melody, Rap, Folk-னு எந்த மாதிரி Song கேட்டாலும் அதை இமானால அவங்க நினைச்சத விட Bestஆ கொடுக்க முடியும். குறிப்பா “Melodies”. இங்க அவருக்கு “Melody Maestro”னு ஒரு பட்டம் கொடுத்திடுவோம்.

இப்ப இமான் இசைல என்னோட Favorite TOP 10 Situation Songs பாக்கலாம்.

“தந்தை பாசத்துக்கு” – அன்புள்ள அப்பா, குறும்பா, பாட்டு

“அண்ணன் தங்கை பாசத்துக்கு” – உன் கூடவே பொறக்கனும், தங்கம், அண்ணே யாரண்ணே

“நட்புக்கு” – ஜிகிரி தோஸ்த், நண்பியே, நட்பே நட்பே

“தமிழனின் பெருமைக்கு” – தமிழன் என்று சொல்லடா

“தனிமைக்கு” – என் இனிய தனிமையே

“Party Modeக்கு” – வாடா வாடா பையா, எப்ப மாமா Treat, சொப்பணசுந்தரி, டங் டங்

“குத்துக்கு” – அடிச்சு தூக்கு, லாலா கடை, டண்டணக்கா

“Motivation” க்கு – வாடா தம்பி, அண்ணாத்த அண்ணாத்த

“Fun Intro Song” க்கு – ஆட்ரா ராமா, வித்த வித்த காதல் வித்த, உலகத்துல நீ (கோவை பிரதர்ஸ்)

“Remix” க்கு – என்னடி முனியம்மா, என்னம்மா கண்ணு

“குட்டீஸ் Favourite” – கும்முறு டப்பற, ஜிங்க் சிக்கா, என்னம்மா இப்டி பண்றீங்களேமா, மாஸ்டர் ஓ மாஸ்டர், டமாலு டுமீலு, ஊதா கலரு ரிப்பன், சொய் சொய், Fy Fy.

டி. இமான் டாப் 10 பின்னணி இசை திரைப்படங்கள்

10) தலைநகரம்
9) நான் அவன் இல்லை
8) திருவிளையாடல் ஆரம்பம்
7) மைனா, கும்கி
6) டிக் டிக் டிக், மிருதன்
5) கடைக்குட்டி சிங்கம்,
4) வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா
3) அண்ணாத்த, விஸ்வாசம்
2) தொடரி, டெடி
1) ஜில்லா

டாப் 5 Fun BGM’s

5) திருவிளையாடல் ஆரம்பம் Thug Bgm
4) நாய் சேகர் Bgm
3) தேல்பத்ரிசிங் Bgm
2) Encounter ஏகாம்பரம் bgm
1) வருத்தப்படாத வாலிபர் சங்கம் Swag bgm

டாப் 20 Melodies

20) பார்க்காத பார்க்காத
19) ஒன்னும் புரியல
18) கண்ணான கண்ணே
17) கூட மேல கூட வச்சு
16) எம்புட்டு இருக்குது ஆச
15) அழகிய அசுரா
14) சொல்லிடாலே
13) விழிகளில் விழிகளில்
12) அம்மாடி உன் அழகு
11) பிடிக்குதே
10) டோரா டோரா
9) முட்டாளாய் முட்டாளாய்
8) தூவானம்
7) உன் மேல ஒரு கண்ணு
6) மொபைலா மொபைலா
5) கடவுளே கடவுளே
4) ஜல் ஜல் ஓசை
3) யார் இந்த முயல் குட்டி
2) ஏதோ மாயம் செய்கிறாய்
1) கண்ணம்மா

இது மாதிரி பல Categoryல இமான் Songs-அ நாம பிரிக்கலாம். ஏன்னா அந்த அளவு தன்னோட இசைல பிரிச்சு இருப்பாரு. இப்படி பல நல்ல பாடல்கள நமக்கு தந்த D.இமான் பல புது புது பாடகர்களையும் தந்துட்டு தான் இருக்காரு.

இமானோட இசைப் பயணம் இந்த பிறந்தநாள்லருத்து இன்னும் சிறப்பா அமஞ்சு பல இமாலய சாதனைகள் படைக்க சூரியன் Fm-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI