இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் விருந்தாக ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.
அரங்குகள் அனைத்தும் விழாக்கோலமாக மாறும் அளவிற்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி விட்டனர்.