Specials Stories

“கானாவின் GodFather தேவா”

தமிழ் சினிமா ரசிகர்களை இசைஞானி இளையராஜா,இசைப் புயல் AR Rahman போன்றவர்கள் தங்களின் இசையால கட்டி ஆண்ட காலத்துல, கானா,மெலடி, குத்துனு ஒவ்வொரு பாட்டுலயும் பட்டைய கெளப்பி இசை ரசிகர்களால கட்டி அணைச்சு கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தான் நம்ம “தேவா”.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு தென்னிந்திய மொழிகள்ல 20வருஷத்துல 400க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைச்சு, தேவா பட்டுனாலே என்னோட Favorite தான்னு சொல்லவச்சாரு..

சின்ன வயசுல இருந்தே இசை மேல இருந்த ஆர்வத்தால சினிமால இசையமைப்பாளர் ஆகுறதுக்கு முன்னாடி தேவா நிறைய தொலைக்காட்சிகளுக்கும், ஆன்மீக பாடல்களுக்கும் இசை அமைச்சுட்டு இருந்தாரு. 1989ம் வருஷம் வெளிவந்த மனசுக்கேத்த மகராசன் படம் மூலமா சினிமால இசையமைக்க ஆரம்பிச்சாரு. 1990வது வருஷம் பிரசாந்த் நடிப்புல, தேவா இசைல ரிலீஸ் ஆன வைகாசி பொறந்தாச்சு படத்துல வந்த சின்ன பொன்னுதான் வெட்க படுது, தண்ணி குடம் எடுத்து, ஆத்தா உன் கோவிலே பாட்டெல்லாம் ராஜா இசைல மூழ்கிட்டு இருந்த ரசிகர்களை தேவா இசைல நீச்சல் அடிக்க வச்சுதுனு சொல்லலாம்.இந்த படத்தோட பின்னணி இசைக்காக அதே வருஷம் தமிழ்நாடு அரசு விருதும் வாங்கினாரு தேவா.

தேவானா ‘கானா’-னு ஒரு பெயர் இருக்கு அது உண்மை தான். ஏன்னா அந்த அளவு காத்தடிக்குது காத்தடிக்குது, மீனாட்சி மீனாட்சி, சலோமியா , அண்ணா நகரு ஆண்டாளு , முனிமா முனிமா, கவலைபடாதே சகோதர, வாடி பொட்டபுள்ள வெளியே போன்ற பல பாட்ட நாம பல ஆயிரம் தடவ கேட்டு ரசிச்சு இருப்போம். இருந்தாலும் தேவா இசைல வந்த மெலடி பாடல்கள் அவருடைய கானாவ Overtake பண்ணிடுச்சுனு கூட சொல்லலாம். அதனாலேயே அவருக்கு “தேனிசைத் தென்றல் தேவா” னு ஒரு பெயர் இருக்கு. இந்த பட்டத்தை அவருக்கு கொடுத்தது நம்ம மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் ஐயா.

இன்னைக்கு தமிழ் சினிமால இருக்க ஒவ்வொரு முன்னணி நடிக்கர்களுக்கும் அவங்களோட பயணத்துல தேவா இசை மிகப்பெரிய பங்குனு சொல்லலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-னு சொன்ன உடனே நமக்கு ஞாபகம் வர்ற படங்கள்ல முக்கியமான படங்கள் அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா. அதோட தலைவர் டைட்டில் கார்ட் வரும் போது வரக்கூடிய “டன் டடன் டடன் டடன்” BGM. அதுக்கெல்லாம் சொந்தகாரர் நம்ம தேவா தான். இன்னைக்கு வர ஆயுதபூஜை-னா ஆட்டோகாரர்கள் ஸ்டாண்ட்ல போடுற முதல் பாட்டு பாட்ஷால வந்த ஆட்டோகாரன் பாடல். அதேமாறி பாட்ஷால வர பின்னணி இசைலாம் சூப்பர்ஸ்டார்காக பாத்து பாத்து செதுக்கி இருப்பாரு தேவா.

உலகநாயகன் கமல்ஹாசன்-க்கும் தேவா இசைல வந்த பஞ்சதந்திரம், பம்மல் K சம்மந்தம், அவ்வை சண்முகி படங்கள் சூப்பர் ஹிட். குறிப்பா அவ்வை சண்முகி படத்துல வந்த ஒவ்வொரு பாட்டும் இப்ப கேட்டாலும் புதுசா இருக்கும். காதலா காதாலா, வேலை வேலை வேலை பாட்டெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ரஜினி ,கமல் போலவே அஜித் , விஜய்க்கும் தேவா பாடல்கள் அவங்க படங்களுக்கு வெற்றியை பெற்று தந்துச்சு. தல அஜித்துக்கு ஆசை, வாலி, முகவரி, தளபதி விஜய்க்கு பிரியமுடன், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், குஷி-னு அந்த படங்கள்ல வந்த எல்லா பாட்டும் ஹிட் கொடுத்தாரு.

தேவா இசைல ஒவ்வொரு Situation-க்கும் ஒரு பாட்டு இருக்கு. இயற்கைக்கு புல்வெளி புல்வெளி , வாழ்க்கைக்கு ரா ரா ரா ராமையா, மழைக்கு மேகம் கருக்குது, மசாலாக்கு கட்டிபுடி கட்டிபுடிடா, நிலவை கொண்டுவா, துள்ளலுக்கு லாலாக்கு டோல்டப்பிமா, காதல் தோல்விக்கு அவள் வருவாளா, Motivationக்கு வெற்றி நிச்சயம்.. இப்படி பல பாடல்கள் சொல்லிட்டே போலாம். அதுபோல தேவா பின்னணி இசைல இப்ப வரை காதலன் காதலிய பாக்குற சீன்க்கு பாக்காவா பொருந்துற வாலி விசில யாராலையும் மறக்க முடியாது.

இப்ப இருக்க 2K கிட்ஸ்க்கு நம்ம தேனிசைத் தென்றல் தேவா பாடகரா பரிட்சையம், மான் கராத்தேல பாடின ஓப்பன் தி ஷட்டர், தெறில பாடின ஜித்து ஜில்லாடி, கர்ணன்ல பாடின மஞ்சணத்தி புராணம் பாட்டெல்லாம் 2Kகிட்ஸ்க்கும் தேவாவ அறிமுக படுத்தி பாட்ஷால வர்ற சீன் மாதிரி “நீங்க யாரு யாரு யாரு”-னு கேட்டு தேவாவ பத்தியும், அவரோட பாடல்கள் பத்தியும் தெரிஞ்சுக்க வச்சுதுனு சொல்லலாம்.

80’s,90’s,2K Kids-னு எல்லாருக்கும் Favoriteஆன நம்ம தேனிசைத் தென்றல் தேவா இன்னும் நிறைய படங்களுக்கு இசை அமைச்சு இப்ப இருக்க இசை ரசிகர்களுக்கும் பல பாடல்கள் தந்து, நல்ல ஆரோக்கியத்தோட இருக்க சூரியன் Fm-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • by RJ SRINI.

About the author

alex lew