குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ பட வெளியீட்டை முன்னிட்டு சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது அவருடைய ஆரம்ப காலம் முதல் தற்போது வரையிலான அனுபவங்கள் குறித்து பேசத் தொடங்கிய அவர், “நான் ஒரு தொகுப்பாளராக தான் அறிமுகம் ஆனேன். சில தொலைக்காட்சிகளில், சன் டிவியில் கூட தொகுப்பாளராக பணி புரிந்துள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக மர்ம தேசம் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. மர்ம தேசத்திற்கு முன்பு கூட நிறைய சீரியல்களில் நடித்திருந்தேன். ஆனால் மர்ம தேசத்திற்கு பின்பு தான் தொடர்ச்சியான நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.

நான் நடித்ததில் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் முதலில் வெளியானது. பின்னர் காக்க காக்க, உனக்கு 20 எனக்கு 18 என அப்படியே போய்க் கொண்டிருந்தது. பின்னர் காஞ்சனா படத்தில் தான் எனக்கு மீண்டும் ஒரு பிரேக் கிடைத்தது. இதில் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. போன போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் சூர்யா உடன் காக்க காக்க, வேல் மற்றும் எதற்கும் துணிந்தவன் என 3 படங்களில் நடித்த அனுபவம், இயக்குநர் பாண்டியராஜ் உடன் பணியாற்றிய அனுபவம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :