தமிழக மாணவர்களின் ஓவியத் திறமையை ஊக்குவிக்கும் விதமாக வருடம் ஒருமுறை சூரியன் FM நடத்தும் ‘டிஜிட்டல் வர்ணஜாலம்’ சீசன்-3 தற்போது கோலகலமாக தொடங்கியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த சூழலில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் வீட்டில் முடங்கியிருந்த மாணவ, மாணவியருக்கு புத்துணர்வூட்டும் விதமாக டிஜிட்டல் வர்ணஜாலம் சீசன் – 1 உதயமானது. வீட்டில் அடங்கி கிடந்த மாணவர்களின் திறமைக்கு தீனி போடும் வகையில் அதுவரை Onground-ல் நடந்து கொண்டிருந்த தனது வர்ணஜால போட்டியை டிஜிட்டல் வர்ணஜாலமாய் மாற்றியது சூரியன் FM.
மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத சூரியன் FM கடந்த 14 வருடங்களாக பள்ளி மாணவ மாணவியர்களின் ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக வர்ணஜாலம் என்னும் ஓவிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது. அதில் முதல் 12 வருடங்கள் மாணவர்கள் நேரடியாக பங்கேற்கும் போட்டியாக இது நடத்தப்பட்டது. கொரோனாவுக்கு பின் அது டிஜிட்டல் வர்ணஜாலமாக பரிணமித்துள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 5000 மாணவ மாணவியர்கள் பங்குபெறக் கூடிய இந்த பிரம்மாண்ட ஓவிய போட்டிக்கு இது வரை இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கியுள்ளனர்.
வகுப்பு வாரியாக பிரிவுகள் கொண்டு நடத்தப்படும் இந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெறும் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக பல கண்கவர் பரிசுகளும் வழங்கப்படும். கடந்த 2 வருடங்கள் போலவே டிஜிட்டல் உலகில் தமிழக மாணவர்களுக்கான பிரம்மாண்டமான ஓவிய போட்டியாக இந்த வருடம் நடைபெறும் டிஜிட்டல் வர்ணஜாலம் சீசன் 3-ம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
மாணவர்கள் வகுப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் தங்கள் ஓவியங்களை அனுப்பலாம்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை “My Happy Home”
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை “My Favourite Sport”
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை “Tamilnadu in 2030”
போட்டியில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் சூரியன் FM-ற்கு உங்களுடைய ஓவியத்தை பின்வருமாறு அனுப்பலாம். 8668095588 என்னும் வாட்ஸப் எண்ணிற்கு Hi என Message செய்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்து உங்கள் ஓவியத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். ஓவியத்தை அனுப்ப கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்கள்.
https://api.whatsapp.com/send?phone=+918668095588
டிஜிட்டல் வர்ணஜாலம் : சீசன் – 3 அறிவிப்பு வெளியானதிலிருந்து இதுவரை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து பல மாணவர்கள் ஓவியங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். உங்கள் குழந்தைகளின் திறமையை அனைவரும் அறிந்து கொள்வதற்கான இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அவர்களின் கை வண்ணத்தை சூரியன் FM-ற்கு அனுப்புங்கள். கை நிறைய பரிசுகளை வெல்லுங்கள்.
மேலும் விவரங்களுக்கு சூரியன் FM-ன் சமூக வலைதள பக்கங்களில் இணைந்திருங்கள்.