ஒரு பாட்டு டீச்சர் ஸ்கூல்ல நிறைய பேருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்குறார். அப்போ ஒரு பையன் மட்டும் ‘சார், நான் ஒரு பெரிய டைரக்டர் ஆவேன். என் படத்துக்கு நீங்க தான் மியூசிக் போடுறீங்க’ அப்படின்னு சொன்னப்ப அந்த டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. ஒரு சின்ன சிரிப்போட கடந்து போயிட்டாரு.
ஆனால் அதே பையன் ரொம்ப நாள் கழிச்சு தொடர்ந்து அந்த கனவுக்காக உழைச்சு ஒரு படம் எடுக்குறான். அந்தப் படத்துக்கு அவங்க ஸ்கூல்ல வேலை பார்த்த மியூசிக் டீச்சரையே கூப்பிட்டு மியூசிக்கும் போட வச்சாரு.
அந்த படத்துல நடிச்ச யாருக்குமே அந்த படத்தோட மியூசிக் டைரக்டர் யாரு அப்படின்றது படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் தெரியாது. தெரிஞ்சா ‘இவரை ஏன் செலக்ட் பண்ணுன, நல்ல அனுபவசாலி யாரையாச்சும் போடலாம்ல; முதல் படம் வேற, ரிஸ்க் எடுக்காத’னு யாரும் கேட்கக்கூடாது இல்லையா? அந்த காரணத்துக்காக மறைச்சு மறைச்சு வச்சிருக்கார்.
அவரோட முதல் படம் ரிலீஸ் ஆகுது. மதுரை சைடு எல்லாம் படம் அப்படி ஓடுது. பாட்டெல்லாம் அவ்வளவு பெரிய ஹிட். பத்தாததுக்கு அவரோட முதல் படத்துக்கு அவரே ப்ரொடியூசும் பண்ணி இருக்காரு. அதே நம்பிக்கையோட இரண்டாவது படம் எடுக்குறார். இந்த படத்துல நடிக்கவும் செய்றாரு. அந்த ரெண்டு படத்தோட மியூசிக் டைரக்டரும் மியூசிக் டீச்சரா இருந்த ஜேம்ஸ் வசந்த் தான்.
ஆனால் கால சூழல் அவரையும் ஒரு கடனாளி ஆக்குது. படத்தை இயக்குவதை விட்டுட்டு, படத்தை தயாரிக்கிறதை விட்டுட்டு நடிக்கிறார். அடுத்தடுத்து படங்கள் தொடர்ச்சியா நடிக்கிறார். காலத்தின் கட்டாயத்தால பிடிக்காத ஒரு சில கதை களத்துல நடிக்க நேரிடுது. ஒரு காலத்துல அஜித் சார் இப்படித்தான் அடுத்தடுத்த படங்களில் நடிச்சாரு. அவருக்கே அந்த சூழ்நிலை வந்த போது நமக்கு வராதா அப்டினு எல்லாம் கடந்து போகும் அப்படிங்குற நம்பிக்கையோட எல்லாத்தையும் தாண்டி இப்ப மறுபடியும் படத்தை டைரக்ட் பண்ணலாம் அப்படின்ற நிலைக்கு வந்து இருக்காரு.
கடன் எல்லாம் முடிச்சுட்டு அவரோட அடுத்த படம் எப்படி இருக்க போகுது, அந்த படத்துல அவரே ஹீரோவா நடிக்க போறாரா? அப்படி அவர் ஹீரோவா நடிச்சா அந்த படத்துல தாடிய எடுப்பாரா? ஏன் தாடியை குறிப்பிட்டு சொல்றேன்னா… தாடியை எடுக்கணும் என்பதற்காக நிறைய நல்ல கதைகளை வேணாம்னு சொல்லி இருக்காரு.
ஏன்னா அவ்வளவு பெரிய தாடிப் பிரியர். தாடியை எடுத்தா அவருக்கே அவரை அடையாளம் தெரியாது. தாடியை எடுத்துட்டு ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள்ள போகும்போது அந்த ஹோட்டலில் இருக்கிறவர்களுக்கே இவர் யாருன்னு அடையாளம் தெரியல. உள்ள விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் நண்பர் வந்து சொல்லி தான் உள்ள விட்டுருக்காங்க.
அப்பேற்பட்ட தாடிப் பிரியர் தான் டைரக்டர்- ப்ரொடியூசர்- ஆக்டர் இப்படி பன்முகத்திறமை கொண்ட சசிகுமார். மியூசிக் டைரக்டர் & மியூசிக் டீச்சர் ஜேம்ஸ் வசந்தோட ஸ்டூடண்ட் சசி குமார்.
இசைக் கனவை சுமந்துகொண்டிருந்த ஆசிரியரை இசையமைப்பாளராக்கிய டைரக்டர் சசி குமார். ஏராளமான புது முகங்களை அறிமுகப்படுத்திய சசிகுமார் . இப்படி பல புகழுக்கு சொந்தக்காரர் டைரக்டர்- ப்ரொடியூசர்- ஆக்டர் சசிகுமார் அவர்களுக்கு சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.