வழக்கமா எல்லாரும் வானொலி-ல பாட்டு கேப்பாங்க… ஆனா இவங்க தன்னோட 10 வயசுலயே வானொலி-ல பாட்டு பாடுனாங்க… அந்த பாட்டுக்கப்புறம் அலமேலு அப்படிங்குற இவங்க பேரு மட்டும் பட்டம்மாளா பரிமாணம் அடையல… கர்நாடக இசை உலகமே ஒரு பெரிய பரிமாணம் அடைஞ்சுது…
அதிசயம் என்னன்னா? 2 வயசு-ல பேச ஆரமிக்குற குழந்தைங்களுக்கு மத்தியில 4 வயசுலயே பாட ஆரமிச்சு 13 வயசுல முதல் கச்சேரியயும் அரங்கேற்றுனாங்க அலுமேலு என்கிற பட்டம்மாள்… சுதந்திர உணர்வை தூண்டுற “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” பாடல்.. பாரதியார் எழுத்துக்களால உருவான “பாரத சமுதாயம் வாழ்கவே”… ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்திக்கும் எல்லாரு வீட்டுலயும் ஒலிக்கற “கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை” பாடல்-னு இந்த குரல்களுக்கு சொந்தமானவங்க இவங்க தான்…
ரொம்ப சின்ன வயசுலயே இசைத் துறைல இளவரசியா ஜொலிச்ச இவங்க M.S.சுப்புலக்ஷ்மி, M.L.வசந்தகுமாரி இவங்களோட சேர்ந்து இசைப்பேரரசியா பெண் மும்மூர்த்திகள்ல ஒருத்தரா தன்ன நிலை நாட்டிக்கிட்டாங்க… 1930 கால கட்டங்கள்ல தமிழ், தெலுங்கு படங்கள்ல பாடுன கர்நாடக இசை பாடகியும் இவங்க தான்… 2000-ஆம் ஆண்டுல 50-வது குடியரசு தின கொண்டாட்டத்துல A.R.ரஹ்மான் இசையமைச்ச “ஜன கன மன” பாடல்ல பாடுன 80 வயசு சீனியர் சிங்கரும் இவங்க தான்…
இந்தியால மட்டும் இல்ல, இவங்க கான குரல் கலந்த இசை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி-னு பல நாடுகள் கடந்து பல கண்டங்கள் தாண்டி ஒலிச்சுது… இசை-ல இவங்க வாங்குன விருதுகள் ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… பத்ம பூஷன், பத்ம விபூஷன், கலைமாமணி, சங்கீத அகாடமி, சங்கீத கலாசிகாமணி, இசைபேரறிஞர், தேசிய குயில்-னு விருதுகள வாங்கி குவிச்சாங்க இந்த கானக்குயில்….
இப்படிப்பட்ட கர்நாடக இசையின் கான சரஸ்வதி D.K.பட்டம்மாள் அவர்களுக்கு Suryan FM சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.