Specials Stories Suryan Explains

மணப்பாறை முறுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரபலம் தெரியுமா?

Manapparai-Muruku

நம்ம எல்லாரோட வாழ்கைலையும் இந்த ஒரு விஷயம் கண்டிப்பா நடந்திருக்கும்.என்ன தான் இப்ப இருக்குற தலைமுறை Pizza, Burger, French Fries-னு சாப்ட்டு வந்தாலும், இதெல்லாம் நம்மள கட்டி இழுத்தாலும் அது பக்கத்துல ஒரே ஒரு முறுக்கு வச்சா போதும், நம்ம சின்ன வயசுல கைல ஒரு ரூபா இருந்தா கூட முறுக்கு வாங்கி சாப்பிடுற அந்த அழகான நினைவுகள் ஞாபகத்துக்கு வந்து நம்ப கை தன்னால அந்த முறுக்கு பக்கமா போய்டும்.

அந்த வகைல ஒரே ஒரு இடத்துல இருந்து வரும் முறுக்கு மட்டும் ரொம்பவே பிரபலம். அப்படி என்ன முறுக்கு அது? தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகரத்தில் இருந்து வரும் முறுக்கு தான் அது. இந்த முறுக்கின் சுவையே தனி தான். மணப்பாறை முறுக்கின் சுவைக்கு காரணம் என்ன தெரியுமா? அங்க இருக்குற நிலத்தடி தண்ணீர் இயற்கையாவே உப்புத்தன்மை கொண்டவை. இந்த நீரை கொண்டு முறுக்கு தயாரிக்கப்படுவதால் அவை சுவையாக இருப்பதாக அந்த ஊர் முறுக்கு தொழில் வியாபாரி கூறுகிறார்.

மேலும் இந்த வியாபாரத்தை தலைமுறை தலைமுறையாக நடத்தி வருவதாலும், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கூட முறுக்குகள் கொண்டு செல்லப்படுவதாலும் மிகவும் பெருமையாக உள்ளது என்றும் கூறுகிறார்.

மேலும் இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இதில் இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்.

Article By Jothika