Cinema News Stories

டாக்டர் First Look இதோ !!

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #HappyBirthdaySivakarthikeyan என்ற Tag-ஐ ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அவர் நடித்து வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் First Look Poster வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன், யோகி பாபு ,வினய் ஆகியவர்களும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கின்றனர்.

‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா‘ போன்ற படங்களை தயாரித்த சிவகார்த்திகேயனின் SK Productions தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் First Look Poster-ல் சிவகார்த்திகேயன் ஒரு Sofa-வில் அமர்ந்து இருப்பது போன்ற ஒரு Still இடம்பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

டாக்டர் திரைப்படத்தின் First Look Poster கீழே உள்ளது.