சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் First Look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் First Look குறித்த Update நேற்று வெளியானதிலிருந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த போஸ்டரை காண காத்திருந்தனர்.
டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் கலக்கிய பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன், சிவாங்கி, RJ விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்புகளை வைத்து பார்க்கும்போது இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார் என கணிக்க முடிகிறது.
வெளியாகியுள்ள first look போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஸ்டைலாக நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவருக்குப் பின்னால் RJ விஜய், பால சரவணன், சிவாங்கி ஆகியோரும் மாணவர்கள் போல போஸ் கொடுத்து இடம்பெற்றுள்ளனர்.
இப்படத்தின் டப்பிங் முடிந்துள்ளது என்பதை சிவகார்த்திகேயன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்திலேயே படத்தின் first look குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்துள்ள அனிருத் அவர்களே Don திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
டான் திரைப்படத்தை குறித்த அடுத்தடுத்த Update-கள் வரிசையாக வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படம் இளைஞர்களையும், குடும்ப ரசிகர்களையும் கவரும் திரைப்படமாக அமையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டான் திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
டான் first look போஸ்டரை கீழே காணுங்கள்.