சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த ‘டெடி’ திரைப்படத்தின் “என் இனிய தனிமையே” பாடல் Youtube-ல் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இப்பாடல் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் டி.இமான் தான் டெடி திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது. குறிப்பாக “என் இனிய தனிமையே” மற்றும் “நண்பியே” பாடல்கள் பலரின் Playlist-ல் தினமும் தவறாமல் ஒலிக்கும் பாடல்களாக வலம் வருகிறது.
பொதுவாக சித் ஸ்ரீராம் பாடும் பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் ஆகும் என்பது நாம் அறிந்ததே. அந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் “என் இனிய தனிமையே” பாடலும் சித்தின் மேஜிக்கல் number-களில் ஒன்றாக மாறி விட்டது. இப்பாடலின் வெற்றிக்கு பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மாய வரிகளும் முக்கிய காரணம் என்று கூறலாம்.
தனிமை எவ்வளவு இனிமையானது என்பதை இப்பாடலின் ஒவ்வொரு வரியும் நமக்கு உணர்த்தும். “கவலைகள் என்னை வருத்த, உன்னிடம் என்னை துரத்த, உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்” போன்ற வரிகள் தனிமையின் தாங்குதலையும் ஆழத்தையும் நமக்கு உணர்த்துகிறது.
ஏற்கனவே இப்பாடலின் lyric வீடியோ 87 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை Youtube-ல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பாடலின் Official வீடியோவும் 1 கோடி பார்வைகளை பெற்றுள்ளது “டெடி” படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
“என் இனிய தனிமையே” பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.