சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் Suriya40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. நாளை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அப்பூஜையில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, தங்கதுரை, சுப்பு பஞ்சு அருணாச்சலம், சரண் ஷக்தி, பிரியங்கா மோகன், சரண்யா மோகன், தேவ தர்ஷினி, திவ்யா துரைசாமி, கலை இயக்குனர் தோட்டா தரணி ஆகியோர் பங்கேற்றனர். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் சமீபத்தில் இயக்கிய ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் மற்றும் பாண்டிராஜ் கூட்டணி இணைந்து சூர்யாவை வைத்து இந்த சூர்யா 40 திரைப்படத்தை உருவாக்குவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் பொதுவாக பாண்டிராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும், அந்த வகையில் சூர்யா 40 திரைப்படமும் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முன் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 திரைப்படத்தின் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 40 திரைப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என தொடர்ந்து சினிமா ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், இப்படத்திற்கு “எதற்கும் துணிந்தவன்” என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். வெளியான First Look வீடியோவில் சூர்யாவின் mass ஆன Action Sequence-ல் இருந்து சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இப்படம் மாபெரும் வெற்றியடைய படக்குழுவினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட First Look வீடியோவை கீழே காணுங்கள்.