நம் அண்டை நாடு பாகிஸ்தான் குறித்த நமக்கு தெரியாத சுவாரஸ்யமான 10 விஷயங்கள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.
- எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது உயரமான மலை ‘K2’ காரகோரம் மலைத்தொடரில், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ளது.
- பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள துறைமுக நகரம் குவாடர். அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரம். உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகம் இங்கு அமைந்துள்ளது.
- உலகின் எட்டாவது அதிசயம் என கூறப்படும் காரகோரம் நெடுஞ்சாலை பாகிஸ்தானில் உள்ளது. இது சீனா-பாகிஸ்தான் நட்பு நெடுஞ்சாலை எனவும் அழைக்கப்படுகிறது. இது 4714 மீட்டர் உயரமுள்ள காரகோரம் மலைத்தொடரின் குஞ்செராப் கணவாய் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான சாலை ஆகும்.
- உலகின் ஒரே இஸ்லாமிய அணுசக்தி நாடு பாகிஸ்தான்.
- உலகிலேயே மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானை சேர்ந்தவர்.
- பாகிஸ்தானில் அமைந்துள்ள டார்பெலா அணை உலக அளவில் அதிகமாக நீர் தேக்கி வைக்கும் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- பாகிஸ்தான் உலகின் நான்காவது பெரிய நீர்ப்பாசன அமைப்பைக் கொண்டுள்ள நாடாகும்.
- உலகின் இரண்டாவது பெரிய உப்புச் சுரங்கங்களான (கெவ்ரா சுரங்கங்கள்) பாகிஸ்தானில் அமைந்துள்ளன. உலகின் புகழ்பெற்ற இளஞ்சிவப்பு இமயமலை உப்பு பாகிஸ்தானிலும் வெட்டப்படுகிறது.
- உலகின் மிக உயரமான போலோ மைதானம் பாகிஸ்தானின் ஷந்தூரில் அமைந்துள்ளது. இந்த மைதானத்தின் உயரம் 3700 மீட்டர்.
- பாகிஸ்தானை சேர்ந்த மலையேற்றம் செய்யக் கூடிய சமினா பெய்க், 2013 ஆம் ஆண்டு தனது 21 வது வயதில் எவரெஸ்ட் மற்றும் 2014 ஆம் ஆண்டு உலகின் மிக உயரமான 7 சிகரங்களிலும் ஏறிய முதல் மற்றும் இளம் முஸ்லீம் பெண்மணி ஆவார். எவரெஸ்ட் சிகரத்திற்கான அவரது பயணத்தின் போது Beyond The Heights எனும் ஆவணப்படம் பதிவு செய்யப்பட்டது.
இது போன்ற வேறு சில நாடுகள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை அடுத்தடுத்த வீடியோக்களில் பார்க்கலாம்.