Specials Stories

கண்களால் கைது செய்யும் FaFa

80களின் இறுதியிலும் 90களிலும் மலையாள சினிமாவிலிருந்து இயக்குனர் தரமான திரைப்படங்களையும், தவிர்க்க முடியாத நாயகர்களையும் உருவாக்கினார், அவர் தான் ஃபாசில். மலையாள உலகம் மட்டுமின்றி தமிழ் சினிமா நாயகர்களும் அவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என விரும்பினர், ஏனென்றால் அவர் கொடுத்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி.

தமிழிலும் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, அரங்கேற்ற வேளை, வருஷம் 16 , காதலுக்கு மரியாதை உட்பட நிறைய படங்கள் ரீமேக் செய்யப்பட்டன. 2002’ வருடம் ஃபாசில் தன் மகன் ஃபகத் ஃபாசிலை சினிமாவில் கை தூக்கிவிட “கையெதும் தூரத்து” என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்கிறார். அந்த திரைப்படம் சரியாக போகவில்லை, box office-லும் படு தோல்வி .

ஃபகத்திற்கு, சினிமா சரியாக வராது என அனைவரும் கூறுகின்றனர், எனவே ஃபகத் ஃபாசிலும் அமெரிக்கா சென்று தன் மேற்படிப்பினை தொடர்கிறார், 5 வருடங்கள் ஓடுகின்றன, தாயகம் திரும்பியவுடன் கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆரம்பத்தில் தவிர்க்கிறார், பின்பு தனக்கு தானே யோசித்துக்கொண்டு சினிமாவில் வெற்றி பெற்று அதன்பிறகு அதிலிருந்து விலகலாம், அது தான் சரியானதாக இருக்கும் என நினைக்கிறார் ஃபகத்.

திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்தார், படத்திற்கு படம் தன்னை தானே செதுக்கி கொண்டு பெரும் வேட்கையோடு மகா நடிகனாக மாறினார் ஃபகத், மலையாள சினிமா மட்டுமின்றி இன்று இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகியிருக்கிறார் பகத்.

Fahadh Faasil: I don't put in all this effort into my work to be compared  with anyone | Malayalam Movie News - Times of India

குறிப்பாக உலகமே கொரோனோவால் முடங்கி இருக்கும் இந்த இரண்டு வருடத்தில் சினிமா துறையும் திக்கு முக்காடிப்போனது. ஆனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் அவர்களுக்கு பொழுது போகாமல் தான் இருந்தனர், இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டவர்கள் OTT நிறுவனங்களும் பகத் பாசிலும் தான்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் TRANCE, C U Soon, Irul, Joji, Malik என 5 திரைப்படங்கள் அவர் நடித்து வெளிவந்திருக்கின்றன. OTT அவரை மலையாள சினிமா மட்டுமின்றி இந்திய அளவில், ஏன் உலக அளவில் அவரை கொண்டு சேர்த்திருக்கிறது.

அத்தனையும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தலைசிறந்த படங்கள், குறிப்பாக “மாலிக்” அவரை வேறு ஒரு பரிமாணத்திற்கு மாற்றியுள்ளது. எப்போதும் புது புது முயற்சிகள் எடுப்பதில் அவ்வளவு ஆர்வம் கொண்டவர் FaFa. அந்த முயற்சி வெற்றி பெறுகிறதோ தோல்வியுறுகிறதோ அடுத்த படத்தில் வேறு ஒரு புது முயற்சி எடுத்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை ஃபகத்,.C U Soon என்ற திரைப்படம், முழுக்க முழுக்க போனில் எடுக்கப்பட்டவை, இந்தியாவில் வந்த முதல் computer screen படம் அதுவே.

மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் பகத் எப்படி தனித்துவம் பெறுகிறார்?

அவர் கண்கள், நவரசம் மட்டுமல்ல நாலாயிரம் விஷயத்தையும் பேசுகின்றன, பல பக்க வசனங்களை சில நொடிகளில் தன் கண்களில் உரக்க பேசுகின்றார் பகத், கண்கள் மட்டும் சிரிக்கும் வித்தையையும் பல படங்களில் நிகழ்த்தியிருக்கிறார்.

Bangalore days (Marriage Scene) -ல் அசட்டு சிரிப்பையும், Trance (Mass Prayer Scene) இல் ஆணவ சிரிப்பையும், Joji (Interval Scene) இல் ஏளன சிரிப்பையும், Super deluxe (Climax Scene)இல் சாகச சிரிப்பையும், Kumblaangi Nights (Barber Shop Scene)இல் நையாண்டி சிரிப்பையும், Malik (Marriage Scene)இல் மழலை சிரிப்பையும் , Thondimuthalum dhrikshaakshiyalum (Police station Scene)இல் நமட்டு சிரிப்பையும் காட்டியிருக்கும் அந்த கண்கள்.

சிரிப்பு மட்டுமல்ல, “22 Female – Kottayam” என்ற படத்தில் (Climax Scene) அழுகை, ஆற்றாமை, கோபம் என அத்தனையும் தன் கண்களில் வெளிப்படுத்தியிருப்பார் FaFa , Annayum Rasoolum (Love at first Sight) என்ற படத்தில் காதல் மொழியில் கவிபாடியிருக்கும் அந்த கண்கள்.

Fahadh Faasil to play antagonist in 'Pushpa' - DTNext.in

ஏற்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிக சாதாரணமான மனிதர்களுடையதாக இருக்கும், தான் உடுத்தும் உடைகள் கூட இயல்பான உடைகளாயிருக்கும், எந்த படத்திலும் அறிமுக காட்சியில் mass இருக்காது, Hype ஏற்றும் தத்துவ பாடல்கள் இருக்காது, ஸ்டண்ட் மேன்கள் பறக்கும் சண்டை காட்சிகள் இருக்காது, படத்தில் Hero வேற ஒருத்தரோ, பலரோ இருப்பார்கள், இவர் கொஞ்ச நேரம் தோன்றினாலும் மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்திருப்பார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் FaFa …!
பின்குறிப்பு : தமிழில் பகத் நடித்து கொண்டிருக்கும் “விக்ரம்” திரைப்படத்திற்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

Script by: Roopan Kanna, Salem

About the author

alex lew