Specials Stories

அப்பா எனும் ஆண் ‘தேவதை’

ஒரு குழந்தைய அம்மா இடுப்புல வச்சு  தூக்கிட்டு போவாங்க ஆனா அப்பா தோள்ல தூக்கி வச்சுட்டு  போவாரு , எதனாலன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கிங்களா? நம்ம பாக்காத உலகத்தை நம்ம பசங்க  பாக்கணும்ன்ற அக்கறை தான். பொதுவா தன்னோட பசங்க விஷயத்துல அம்மா ஒரு விதமா அக்கறை எடுத்துகிட்டாங்கன்னா அப்பாவோட அக்கறை வேறு விதமா இருக்கும். எங்கயாவது போகணும்னு கேட்ட வேணாம்னு சொல்லுவாங்க அம்மா, போயிட்டு வானு permission குடுத்து செலவுக்கு காசும் கொடுப்பாரு அப்பா.

தன்னோட பசங்க நிறைய அனுபவங்களை சேகரிக்கணும்ன்ற அக்கறை அப்பாவுக்குத்தான் அதிகமா இருக்கும். தான் கனத்த உலகத்தை தன்னோட பிள்ளைகள் வழி கண்டு இன்புறுற தந்தைகள் தான் அதிகம். இந்த உலகத்துல எத்தனையோ சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம் ஆனா எல்லா பிள்ளைகளுக்கும் தன்னோட அப்பாக்கள் தான் ரியல் ஹீரோ . ஸ்கூல் ல friends கிட்டக்கூட எங்க அப்பா இப்படி அப்படின்னு பயங்கரமா build – up பண்ணி உயர்வா தான் சொல்லிருப்போம். 

பொதுவா எல்லாரும் சொல்லும்போது அம்மாவோட அன்பு அப்பாவோட கண்டிப்பு ன்னு சொல்லுவாங்க ஆனா அந்த கண்டிப்புல நம்ம புள்ளை வாழ்க்கைல ஜெயிக்கணும்ன்ற ஒரு பரிதவிப்பு தான் அதிகமா இருக்கும் . பொதுவா பெரும்பாலானா இந்திய தந்தைகளோட அடையாளம் என்ன தெரியுமா ?   சாயம் போன நாளே நாலு சட்டை , பழசான செருப்பு , உழைத்து தேய்ந்த கரங்களாத்தான் இருக்கும் ஆனா அதுக்கு பின்னாடி தன்னுடைய பிள்ளைகளை ஒரு பெரிய ஆளாக்கணும்ன்ற பெருங்கனவு ஒளிஞ்சிருக்கும் .

ஒரு கதை சொல்லவா ? ஒருத்தர் சின்ன வயசுல இருந்து தனக்கு வாழ்க்கைல எந்த பிரச்சனை வந்தாலும் சரி தன்னோட அப்பாகிட்ட போய் சொல்லுவாராம் அந்த அப்பா நான் இருக்கேன் பா உனக்குன்னு ஒரு வார்த்தை தான் சொல்லுவாராம் . கொஞ்ச நாளிலேயே அந்த பிரச்சனை தானா சரி ஆயிடுமாம் . அவ்வளவு பலம் அப்பாவோட சொற்களுக்கு இருக்கு . நம்ம எல்லாருக்குமே வாழ்க்கைல உண்மையா  தோள்   கொடுக்கும் தோழான்னா அது அப்பாக்கள் தான் . பெண் பிள்ளைகளுக்கு கனிவுமிக்க தோழான்னா ஆண் பிள்ளைகளுக்கு கண்டிப்பான தோழன் அவ்வளுவுதான்.

எம்டன் மகன் படத்துல வர கண்டிப்பான தந்தை , வாரணம் ஆயிரம் படத்துல வர ஸ்வீட்டானா தந்தை , சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல வர தான் பிள்ளைகளுக்காக எல்லாத்தையுமே பார்த்து பார்த்து செய்யுற தந்தை , அபியும் நானும் படத்துல வர அன்ப கொட்டி கொட்டி குடுக்குற தந்தை , ராஜா ராணி ல வர ரகளையான டார்லிங் டாட் இப்படி நம்ம அப்பா எப்படி இருந்தாலும் எல்லா தந்தைகள் மனசுலயும் இருக்ககுடியை அல்ட்டிமேட் எய்ம் என்ன தெரியுமா தன்னோட பிள்ளைகள் வாழ்க்கைல முன்னேறி நல்ல நிலைக்கு போகணும்ன்றதுதான்.

பூ விக்கிற தந்தையோ   , காய்கறி விக்கிற தந்தையோ , டாக்டர் ரோ , என்ஜினீயரோ , சயின்டிஸ்ட் ஓ தான் இருக்கிற நிலைய விட ஒரு படி நிலை மேல தான் தன பிள்ளைகள் இருக்கணும்னு நினைப்பாங்க.  பல சமயங்ககள்ல அந்த பதட்டம் தான் கண்டிப்பா மாறும் . அத சரியாய் புரிஞ்சிகிட்டு செயல்பட்டா , அது அர்ஜுனருக்கு மஹாபாரத போர் ல கிடைச்ச க்ரிஷ்ணரோட சப்போர்ட் மாதிரித்தான். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! எல்லா அப்பாக்களுமே ரெக்கை இல்லாத ஆண் தேவதைகள் தான்.

ஹாப்பி பாதர்ஸ டே!!!

Article By Dharshini Ram

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.