Cinema News Specials Stories

தமிழ் சினிமாவின் Favourite அம்மா ‘சரண்யா பொன்வண்ணன்!

ச்ச நம்ம அம்மா ஏன் இப்படி இருக்க மாட்டேன்றாங்க, நம்ம அம்மாவும் இப்படி இருந்தா நல்லாருக்கும்ல. அம்மானா இப்டியிருக்கனும், நம்ம அம்மா மாதிரியே இருக்காங்கல்ல.

படம் பாக்கும்போது அதுல வர அம்மா Character-அ பாத்து ஒரு முறையாவது இதுல ஏதோ ஒன்ன நாம நினைச்சிருப்போம். இப்படி தமிழ் சினிமால பெரும்பாலும் அம்மா Character-அ Positive Vibe, Motivation, பாசம், அன்பு, ஏக்கம்னு இதயெல்லாம் சுத்தியே Design பண்ணிருப்பாங்க. இதனாலயே அம்மா Character-களுக்கு எப்பயும் ஒரு தனி Respect தமிழ் சினிமால உண்டு .

என்னதான் Positive Character-அ இருந்தாலும், அந்த கதாபாத்திரத்த ஏத்து நடிக்கும் Actress-ஓட Performance மட்டும் தான் அந்த Character-அ Justify பண்ண முடியும். அவங்க தான் நடிகர்களுக்கு மட்டுமில்லாம மக்கள் மனசுலயும் அம்மாவா நிலைப்பாங்க. அப்படி அம்மா Character-ல நிறைய பேர் நடிச்சாலும், தமிழ் சினிமாவோட அம்மானு சொன்னா சில பேர் தான் நம்ப நியபகத்துக்கு வருவாங்க, அதுவும் இப்போ இருக்கற Generations-க்கு அம்மா Character-னா இவங்க முகம் தான் முதல்ல வரும். அவங்க தான் சரண்யா பொன்வண்ணன் .

ஆச்சி மனோரமாவுக்கு பிறகு தமிழ் சினிமால 2000 காலகட்டத்துல நடிச்ச 90% ஹீரோக்களுக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க சரண்யா பொன்வண்ணன். ஜீவா படத்துல ஆரம்பிச்சு பரத், லாரன்ஸ், விமல், விஷால், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சேரன், தனுஷ், சூர்யா, அஜித்-னு இவங்களோட மகன்கள் பட்டியல் மிக நீளம். மலையாளம், தெலுங்கு ஹீரோக்களுக்கு கூட Favorite அம்மா இவங்க தான்.

Saranya-Ponvannan

ஹீரோக்களுக்கு மட்டுமில்ல ஹீரோயின்களுக்கும் இவங்க ஆஸ்தான அம்மா. ஒரு காலகட்டத்துல அம்மா கதாபாத்திரம்னு சொன்னா எல்லா Directors , Heroes-ஓட Choice சரண்யா பொன்னவண்ணனா மட்டும் தான் இருந்துச்சு. தன்னுடைய Acting Career-அ என்ன தான் ஒரு Herione-அ இவங்க ஆரம்பிச்சாலும் இவங்களுக்கு மிகப் பெரிய Reorganization கொடுத்தது அம்மா கதாபாத்திரங்கள் தான்.

பெரும்பாலும் Heroines தங்களுடைய Marrigae Life-க்கு அப்பறம் கொஞ்சம் பிரேக் எடுத்துட்டு மறுபடியும் அம்மா, அக்கா-னு Supporting Role-க்கு வந்தாலும் சரண்யா அதுலருந்து கொஞ்சம் மாறுபட்டவர்னு சொல்லலாம் .அதுக்கு முக்கியமான காரணம் அவர் எந்த Character நடிச்சாலும் அதுல சரண்யாவா தெரியாம அந்த கதாபாத்திரமா பிரதிபலிப்பாங்க. நான் First சொன்ன மாதிரி அம்மா கதாபத்திரம்னா சும்மா Supporting Role, Hero-க்கு ரெண்டு சீன்ல ஆறுதல் சொல்லிட்டு காணாம போய்டுவாங்க… வேற என்ன புதுசு இருக்க போது அப்டினு இருந்த ஒரு பிம்பத்த நீண்ட நாளுக்கு அப்பறம் ஒடச்சவங்க சரண்யா தான்.

இவங்க Choose பண்ணது எல்லாம் அம்மா ரோல் தான். ஆனா ஒவ்வொன்னும் வெவ்வேற குணாதிசயங்கள் கொண்ட அம்மா. அதே Motivate பண்ற, பையனுக்கு சப்போர்ட் பண்ற அம்மா தான். ஆனா கொஞ்சம் கூட மிகைபடுத்தாம யதார்த்தத்த பிரதிபலிக்குற அம்மாவா இருப்பாங்க. அவங்க அம்மாவா நடிச்ச எந்த படத்த நீங்க பாத்தாலும் அதுல இவங்க Character தனியா உங்க மனசுல நிக்கும். அதனால தான் ஒரு Decade க்கும் மேல Favourite அம்மாவா இவங்க வலம் வந்துட்டுருக்காங்க.

தனியா தைரியமா பையன வளக்குற அம்மா, உயிர பணயம் வச்சி மகன காப்பாத்துற அம்மா, என்ன நடந்தாலும் பையனுக்கு சப்போர்ட் பண்ற அம்மா, அப்பா மகன்க்கு நடுவுல மாட்டிட்டு முழிக்குற அம்மா, மகன அப்பா கிட்ட இருந்து காப்பாத்தி விடுற அம்மா, மகனோட வெற்றிக்கு துணையா இருக்கற அம்மா, வெகுளி அம்மா, பாசக்கார அம்மா, கோவக்கார அம்மா , வீரமான அம்மா, பயந்தாங்கோளி அம்மா-னு அம்மா கதாபத்திரங்களில பல Varierty-ஆன Character-ஆ மட்டும் இல்லாம நடிப்பிலும் காட்டிருப்பாங்க சரண்யா.

உண்மைய சொல்லணும்னா Family , குழந்தைங்க, வேற Profession அப்படி இல்லனா டிவி சீரியல்னு ஓரமா இருந்த பல 80s & 90s Heroines Big Screen-ல Re Entry கொடுக்க சரண்யாவும் ஒரு காரணமா இருந்தாங்க. சும்மா ஒரு ஓரமா நிக்குற அம்மாவா இல்லாம, Character-க்கு முக்கியத்துவம் இருக்க கதாபாத்திரமா இவங்கள பாத்து Choose பண்ண ஆரம்பிச்சாங்க. அந்த அளவுக்கு சரண்யா திரையுலகத்துல ஒரு தாக்கத்த ஏற்படுத்தினாங்க .

பொதுவா அம்மா Character நடிக்கறவங்க Award வாங்குறது அபூர்வம் தான், ஆனா சரண்யா வாங்குன எல்லா Awards-ம் அம்மா Character க்கு மட்டும் தான். சரண்யா பொன்வண்ணன் இதுவர 1 National Award, 2 State Award, 5 Flim Fare Award, 2 Siima Award, 2 ஆனந்த விகடன் Award உள்பட எக்கச்சக்கமான Awards-அ Hero, Herione-க்கு அம்மாவா நடிச்சு மட்டுமே வாங்கிருக்காங்க. இந்திய சினிமாலயே இந்த அளவுக்கு அம்மா கதாபாத்திரத்துக்காக யாரும் இவ்வளவு Award வாங்குனது இல்ல.

இத்தனை பெருமைகளையும் தாங்கி இருக்க இவங்கள அம்மானு ஒரு வட்டத்துக்குள்ள அடக்காம, இவங்களோட Versatility-அ வெளிக்கொண்டு வர இன்னும் நிறைய குணச்சித்திர கதாபத்திரங்கள்ல நடிக்க வச்சா, ஓரமா இருந்த அம்மா Characters உயிர்பெற்றது போல பல கதாபத்திரங்கள் முக்கியத்துவம் பெரும். எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா வரலாறுல ஆச்சி மனோரமாவுக்கு பிறகு என்றுமே நினைவுல இருக்கற குணச்சித்திர நடிகைனா சரண்யா பொன்வண்ணன் தான் இருப்பாங்க.

Article By Sathishkumar Manogaran

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.