பிடித்த இசையமைப்பாளர் என்று ஒருவர் இருக்கலாம், பாடலாசிரியர் என்று ஒருவர் இருக்கலாம், பாடகராகவும் சிலர் மனதில் இடம்பிடிக்கலாம், இயக்குநராகவும் சிலர் மனதில் பதிந்துவிடுவார்கள்… ஆனால் இந்த பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பல வடிவங்களில், பல வண்டிகளில் பயணித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர்களில் ஒருவரான கங்கை அமரன் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர். செந்தூரப்பூவே என யாரும் அறியாத ஒரு பூவை வைத்து ஒரு அற்புதமான பாடலை 16 வயதினிலே படத்தில் எழுதி, அது இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. #HBDGangaiAmaran #HappyBirthdayGangaiAmaran #SuryanFM
அட..! கங்கை அமரனா இந்தப் பாட்டு எழுதியது என்று வியக்கும் அளவுக்கு இவரது பாடல்கள் லிஸ்ட் ரொம்ப நீளம்.
கங்கை அமரன் முதலில் பாட்டு எழுதினார், பிறகு இசையமைத்தார், அதையடுத்து பாடவும் செய்தார், பின்னர் படத்தை இயக்கினார், அதுமட்டுமா இதற்கிடையே டப்பிங்கும் பேசினார்.
‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜுக்கு குரல் கொடுத்தது இவர்தான். அண்ணன் இளையராஜா தயாரித்து இசையமைக்க, ‘கோழி கூவுது’ எனும் படத்தை இயக்கினார்.
சாதாரண அழகான ஒரு கிராமத்து கதை, அந்தத் திரைக்கதைக்குள் மெல்லிய காதல், தடாலடி நகைச்சுவை, எட்டுத்திக்கும் ரசிக்கும் படியான பாடல்கள்… சிட்டி, பட்டி, தொட்டி என எங்கும் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இயக்குரான கங்கை அமரனை மறக்காமல் குறித்து வைத்துக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா ரசிகர் பட்டாளம்.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்து ஊரு விட்டு ஊரு வந்து… கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடலாசிரியர், நடிகர், பின்ணணி குரல் என தமிழ் சினிமாவில் தனது பன்முகத்தையும் வெளிக்காட்டிய கங்கை அமரனுக்கு தமிழ் சினிமா உள்ளவரை அழிவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் இவர் ஒரு அஷ்டாவதானி போலத்தான்.
பண்ணைபுரத்து எக்ஸ்பிரஸ், கங்கை அமரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!