தனது நீண்ட கால ஆசையான மூக்குத்தி – யை இந்த லாக்டவுனில் குத்திக்கொண்டார் பூ நாயகியான பார்வதி…
பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பார்வதி அதன் பின் மலையாளத்தில் மிக சிறந்த நடிகையாக உள்ளார்.
தன்னுடைய நீண்ட கால ஆசையான மூக்குத்தி அணிந்துகொள்வதை இந்த லாக்டவுனில் நிறைவேற்ற திட்டமிட்டு அதை நிறைவேற்றி விட்டார். தனது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் தான் மூக்கு குத்திக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சி நிறைந்த தருணத்திலும், இதுபோல் யாரேனும் செய்ய விரும்பும் முன் அந்த இடம் நூறு சதவிகிதம் சுத்தம் மற்றும் சுகாதாரமானது என்பதை உறுதி செய்துகொண்டு பாதுகாப்பாக இருக்கவும் என வேண்டுகோள் செய்தி விடுத்துள்ளார்…