இன்னைக்கு பெற்றோர்கள் பேச்ச நாம கேக்காம உதாசின படுத்துனோம்னா நாளைக்கு நமக்கு பிறக்குற பசங்க நம்பள உதாசின படுத்துவாங்க..அதுதான் கர்மா.ஒரு குழந்தைய பெத்து வளக்குறது சாதாரண விஷயம் இல்ல..பிரசவம் பெண்களுக்கு மறுபிறவி அப்டினா,ஆண்களுக்கு மறு அத்தியாயம்.
குழந்தைக்கும் எதுவும் ஆக கூடாது மனைவிக்கும் எதுவும் ஆக கூடாதுனு வேண்டாத தெய்வங்களை வேண்டிட்டு குழந்தை பொறக்குற வரைக்குமே பயத்த கண்ணுல காட்டாம உள்ளுக்குள்ள அழுற கணவர்கள் இங்க ஏராளம்..குழந்தை பிறந்த அந்த ஒரு நொடில இருந்து தனக்காக வாழ்ந்த நாட்கள மறந்து,குழந்தைக்காக வாழ்ந்து,அவங்களோட எதிர்காலத்துக்காக தன்னோட வாழ்க்கைய அர்ப்பணிக்குற ஒவ்வொரு பெற்றோர்களும் தியாகிகள் தான்.
குழந்தை பிறந்து கையில வாங்குற அந்த ஒரு தருணம் கண்டிப்பா பெற்றோர்களால மறக்க முடியாது.அளவு கடந்த சந்தோஷமும் ஒரு பெருமிதமும் இருக்கும்..contact list ல எல்லா நம்பர்கும் call பண்ணி எனக்கு பையன் பொறந்து இருக்கான்..பொண்ணு பொறந்து இருக்கா அப்டினு சொல்லும்போது எதையோ சாதிச்ச feel கிடைக்கும். ஆனா குழந்தை வளர்ப்புல பெண்களுக்கு நிகரா ஆண்களுக்கும் சமஅளவுக்கு பங்கு இருக்கு.ஆனா அத ஆண்கள் பல தருணங்கள் ல உணர்வது இல்ல..
இதனால தான் நிறைய குடும்பங்கள்ல சண்டை சச்சரவு.நம்ப என்ன வீட்ல செய்றமோ அத தான் குழந்தைகளும் பாத்து கத்துக்கறாங்க.அதனால பெற்றோர்கள் குழந்தைங்க முன்னாடி எது பண்ணாலும் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கனும
்.உனக்கு என்ன பிரச்சனைநாலும் அப்பா அம்மா நாங்க உனக்கு துணையா இருப்போம்ன்ற நம்பிக்கைய கொடுக்கணும் அது தான் அவங்களுக்கு தோல்வில இருந்து மீள பக்கபலமா இருக்கும்.அதே நேரத்துல கேக்கறதுலாம் வாங்கி தராம கஷ்டம்னா என்னென்றத சொல்லி கொடுக்கணும்
.அப்போ தான் ஒரு பொருளோட அருமை பணத்தோட முக்கியத்துவம் என்னென்றது புரியும்.critical ஆன situation ah எப்படி face பண்ணனும்டறதும் தெரியும்.ஒரு குழந்தை இந்த சமூகத்துல நல்ல படியா வளந்தாலும் தவறான பாதையில போனாலும் பெற்றோர்களோட வளர்ப்ப தான் கை காட்டுவாங்க.குழந்தைகளுக்காக தங்களோட வாழக்கைய அர்ப்பணிக்குற அனைத்து பெற்றோர்களுக்கும் உலக பெற்றோர் தின வாழ்த்துகள்.