கவுண்டமணி இந்த பேர மட்டும் நீக்கிட்டா தமிழ் சினிமாவுல காமெடி அப்படிங்குற இடம் காலி இடமா மாறிடும். ஏன்னா அந்த அளவுக்கு தன்னோட நகைச்சுவை மூலமா தமிழ் சினிமாவில மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கார்.
பொதுவா கவுண்டமணி அப்படினு சொன்னாலே செந்தில் அப்படிங்கற பேரும் சேர்ந்தே வரும். இவங்க 2 பேரும் சேர்ந்து காமெடி பண்ணனும் அப்படினு அவசியமில்லை. இவங்க ரெண்டு பேரும் திரையில் ஒன்னா வந்தாலே போதும் மக்கள் தானா சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க.
கவுண்டமணி இல்லாம செந்தில் வேற யார்கிட்டயாவது அடி வாங்கும் போது நமக்கு அவ்வளவா சிரிப்பு வராது, ஏனா செந்தில் சார் கவுண்டமணி சார் கூட நடிச்சா மட்டும்தான் நம்மில் நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா கவுண்டமணி சார் செந்தில் சார் இல்லாமலே நிறைய படங்கள்ல அவருடைய காமெடியை நிலைநாட்டி இருக்கிறார்.
இன்னும் சொல்லப் போனா நிறைய படங்கள்ல படத்தோட ஹீரோவையே கிட்டத்தட்ட செந்தில் சார் மாதிரி அவர் பயன்படுத்தியிருப்பார். செந்தில் சார அடிச்சா மட்டும் தான் அது காமெடி அப்படிங்குறத தாண்டி செந்தில் சார் இல்லாமலேயே மூட நம்பிக்கையை கிண்டல் பண்றது, சமூகத்தில் இருக்க பிரச்சனைய காமெடி மூலமா தெரியப்படுத்துவது, அரசியல் விஷயங்களை அசால்டாக கலாய்க்கிறது-னு சமூகத்திற்கு தேவையான விஷயத்தையும் தன்னுடைய காமெடி மூலமா சிறப்பா சொல்லியிருப்பார் கவுண்டமணி சார்.
அதுலயும் குறிப்பா சத்தியராஜ் சார், மணிவண்ணன் சார் இவங்களோட சேர்ந்து இவர் பண்ண அரசியல் காமெடிய அடிச்சிக்க ஆளே இல்ல. அந்த அளவுக்கு தரமா இறங்கி கலாய்ச்சு இருப்பார்.
ஒரு சில காமெடிகள் நமக்கு அப்ப மட்டும் தான் சிரிப்ப தரும். ஆனால் கவுண்டமணி சார் காமெடிய எப்ப பார்த்தாலும் சிரிப்பு வரும்.
தமிழ் சினிமால எத்தனை காமெடியன்ஸ் வந்தாலும் தனக்கென தனிப்பாதை அமைச்சு இப்ப வர அதுல முடிசூடா மன்னராக இருக்குறவர் கவுண்டமணி சார். அவருக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.