“The Most Underrated Musician in Tamil Cinema“, அப்படினு இணையத்துல தேடுனா, கண்டிப்பா அது GV பிரகாஷ் னு சொல்லும்.
எத்தனையோ திரைப்படங்களை தன் பின்னணி இசை மூலமாக முன்னணிக்கு கொண்டு வந்திருக்கிறார். “வெயில்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான GV , முதல் படத்துலயே எல்லோரையும் வியக்கவைச்சார். ஆனா அதுக்கு முன்னாடியே “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு” னு Gentle man படத்துல பாடி அசரவச்சார். அப்போ அவர் AR ரஹ்மானோட அக்கா பையன்னு அடையாளமானார், ஆனா இன்னைக்கு தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கார்.
அசுரன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ராஜா ராணி, தெய்வத்திருமகள், தெறி னு ஒவ்வொரு படங்களின் பின்னணி இசையும் பெருங்காவியங்கள். ஒரு வருத்தம் என்னவென்றால், இவர் பாடல்களும் அதன் வெற்றியும் சற்று AR ரஹ்மான் அவர்களின் இசையை போன்று தான், எடுத்த எடுப்பில் GV இன் பாடல்கள் நம் மக்களுக்கு நெருக்கமாவதில்லை, ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு பாடலும் பின்னணி இசையும் தமிழ் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை, எவ்வளவு அற்புதமானது என்று புகழ்ந்தும் செல்வார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசையும் அதனை சமூக வலைத்தளங்களில் தற்போது decode செய்பவர்களும் தான் இதற்கு சான்று…! திரை பின்னணியில் மிரள வைத்த GV பிரகாஷ், திரையிலும் கதையின் நாயகனாக தோன்றினார், சின்ன பையனா இருக்காரே இவர் எப்படி Hero ஆவார்னு கேலி பேசுனாங்க, ஆனா அதையும் தாண்டி சிறந்த படங்களை கொடுத்துட்டு இருக்கார்.
ஆரம்பத்துல ஒரு சில படம் கலாச்சாரத்தை கெடுக்குதுனு கதறுனாங்க சிலர், ஆனா இப்போ இளைஞர்களை ஊக்குவிக்கும் படங்களை எடுக்கிறார் யாரும் பெருசா பாராட்டுன மாதிரி தெரில, ஆனா அது பற்றியெல்லாம் GV எப்போதும் கவலை பட்டதில்லை, தன் பணியை எவ்வளவு சிறப்பாக தன்னால் செய்யமுடியுமோ அதைவிட 2 மடங்கு அதிக சிரத்தையோடு செய்துவிடுகிறார். அதுவே அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் தான்…! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GV என்னும் அறிவு ஜீவி…!