தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளம் கொண்டவர். சூது கவ்வும், தெகிடி, போர் தொழில் என்று பல வித்தியாசமான பெயர் கொண்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து சினிமா துறைக்கு கிடைத்த ஒரு செல்வம் தான் அசோக் செல்வன்.
பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் தோற்றம், எங்கள் மனதை கவர்ந்த உந்தன் மனதை கவரப் போகும் அந்த பெண் யார்? என்ற பெண் ரசிகைகளின் கேள்விக்கு பதில் கூறும் வகையில் தன் காதலி கீர்த்தி பாண்டியனை மணம் முடித்தார். சமூகவலைதளங்களில் பலர் விமர்சனம் செய்த நிலையில், எனக்கு பேரழகியே என் மனைவி தான் என்று தன் காதலை வெளிப்படுத்திய குணம் இவர் மீது கொண்ட மரியாதையை மேலும் அதிகமாக்கியது.
தனது இயல்பான நடிப்பு, வசீகரிக்கும் தோற்றம், அளவான சிரிப்பு, வித்தியாசமான வேடம் என்று தமிழ் சினிமாவில் இயங்கி வருபவர் அசோக் செல்வன். சினிமா துறையில் ஏற்ற இறக்கம் இருப்பது இயல்பு. அசோக் செல்வன் நடிக்கும் படங்களும் அப்படித்தான். ஒரு படம் ஹிட் அடிக்கும். ஒரு படம் Average-ஆக இருக்கும்.
சினிமாவில் சரிவு என்பது சாதாரண ஒன்று. சரிவுக்கு பிறகும் சாதிப்பது என்பது சிலரால் மட்டுமே முடிந்த ஒன்று. இதையெல்லாம் யோசிக்காமல் நடிப்பின் மீதும், அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை தான் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.
திரை உலக வாழ்க்கையில் மட்டுமில்லாமல் திருமண வாழ்க்கையிலும் வித்தியாசத்தை கடைபிடிக்கும் வகையில் உலகமே நவீனத்தை நோக்கி நகரும் போதும்… இவர் திருமணம் ஊர் போற்றும் வகையில் இயற்கை சூழ அரங்கேறியது.
அடுத்து அசோக் செல்வன் அவரது காதலி, தற்போது மனைவி… கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் அனைவரிடத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள ஒரு பாடலும் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இவர்களது திருமணத்திற்கு பிறகு இப்படம் வெளியாவது, அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம், நிஜ வாழ்க்கை ஜோடியை திரையில் பார்ப்பது… இப்படி பல காரணங்கள் இந்த படத்தின் மேலான் எதிர்பார்ப்பை இன்னும் பன்மடங்கு கூட்டியுள்ளது.
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனின் ப்ளூ ஸ்டாருக்கும், திருமண வாழ்க்கைக்கும் சூரியன் FM-ன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.