Cinema News Specials Stories

நான் அவுத்து வுடும் பாட்டுல… பல விசுலு சத்தம் நாட்டுல…

DSP…. Deputy Superintendent of Police Ah னு கேக்காதீங்க… ஒருவேளை அப்படி கேக்கிறிங்கன்னா அப்போ உங்களுக்காகத்தான் இது.

DSP… The Rock Star ‘Devi Sri Prasad’. இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்- ஒரு நல்ல Dancer-கூட. Dancer ஆஹ்… சொல்ற Wait. DSP தன்னோட 16 வயசுல இசைத்துறைக்கு வந்தார். அவரது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டியில, பாடகர் எஸ்.பி.சரணுடன் இணைந்து பணியாற்றினார்.

பிறகு தெலுங்கு சினிமா துறையில் படிப்படியாக தன் தடத்தை பதித்தார். தமிழ்ல விஜயோட பத்ரி திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார். தளபதிக்கும், DSP க்கும் ஒரு Connect இருக்குங்க. விஜயோட இடைக்கால படங்கள்ல அதிக ஹிட்ஸ் குடுத்த பாடல்கள் DSP பாடல்கள் தான்.

பத்ரிய தொடர்ந்து, தமிழ்ல சச்சின், புலி, மழை, சந்தோஷ் சுப்ரமணியம், குட்டி, வேங்கை, ஆறு , சிங்கம், சிங்கம் 2, வீரம், வெடி, மன்மதன் அம்பு ஆகிய படங்களுக்கு இசையமைத்து பாடவும் செய்தார். இந்த படங்கள் எல்லாமே வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களின் மனதில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பெயரை பதிய செய்தது.

சச்சின் One Of The Best movie னு விஜய் இப்போவும் சொல்வார். அவர் மட்டுமே இல்ல நாமளும்தான். பிறகு கந்தசாமி படத்தின் மூலம் தமிழில் நல்ல வெற்றியையும் பெற்றார். இந்த ஆல்பத்தில் நான்கு பாடல்கள் வரை விக்ரமையே பாட வைத்தார். இப்படி இசை மீது ஆர்வம் காட்டி வந்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான, இசையருவி தமிழ் இசை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதன் பின் 10 ஃபிலிம்பேர் விருதுகள், அதில் 9 சிறந்த இசையமைப்பாளர் – தெலுங்கு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஒரு சிறப்பு விருது, 5 Cinema விருதுகள், 7 SIIMA விருதுகள் மற்றும் ஒரு நந்தி விருது பெற்று தனது புகழ்கையும், விருதையும் வாங்கி குவித்தார். வாயாலேயே வாசிக்காதன்னு சொல்வாங்க… இந்த வார்த்தை இவருக்கு நல்லாவே பொருந்துங்க. ஏன்னா வாயாலேயே நல்ல Tune-ம் போடுவாரு.

அதுமட்டுமில்ல எப்ப இசைக்கருவில கை வச்சாலும் இளையராஜாவும், மைக்கல் ஜாக்சன் நினைவுக்கு வருவங்களாம். ஏன்னா இசையில் இளையராஜா, மைக்கல் ஜாக்சன் ரொம்பவே புடிக்குமாங்க. Starting-ல நல்ல டான்சர்னு சொன்னேன்ல, Yes வெடி படத்துல வர ‘காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே’ இந்த பாட்டுல எனக்கு டான்ஸ் கூட நல்ல வருமேனு ஹீரோயின வர்ணிச்சு நல்லாவே ஆடிருப்பாரு.

கொரோனா டைம்ல, கொரோனா வைரஸ்ஸ விட ஊ சொல்றியா மாமா பாட்டு, பட்டிதொட்டி எங்கும் பரவி Viral ஆச்சு. எந்த அளவுக்கு அப்படின்னா புஷ்பா படத்துல நாந்தான் ஹீரோயின்னு ராஷ்மிகா அவுங்களே சொல்ற அளவுக்கு. இப்போ சூர்யாவோட (கங்குவா) படத்துக்கும், The Rockstar Devi Sri Prasad தான் இசையமைக்குறாங்க. So படமும், படத்தோட பாடல்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாள் காணும் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By RJ Maya

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.