Cinema News Specials Stories

Independent இசையின் வழிகாட்டி ஹிப்ஹாப் ஆதி!

ஹிப்ஹாப் அப்படின்ற ஒரு வார்த்தையை கேட்டாலே தமிழ் மக்கள் பல பேருக்கு நியாபகம் வர ஒருத்தர் HIPHOP ஆதி தான். தமிழ் மக்களிடம் ஹிப்ஹாப் பாடல்களை பிரபலமாக்கி இன்னைக்கு இளைஞர்களோட மனசுல இடம் பிடிச்சிருக்காரு.

என்னைக்குமே வெற்றி அப்டின்றது வலியோடுதான் பிறக்கும்னு சொல்வது போல இவரோட வெற்றிக்கு பின்னாடியும் பல வலிகளும் விடாமுயற்சியும் தன்னிம்பிக்கையுமே இருந்திருக்கு. அவரோட வாழ்க்கைல நடந்த முக்கியமான விஷயங்களை மையமா வெச்சு Commercial Value-காக சில விஷயங்கள் சேர்த்து எடுத்த படமே மீசையை முறுக்கு.

அந்த படத்துல வர மாதிரியே அப்பா கிட்ட 1 year Time கேட்டு வந்து ஆதியும் அவரோட Friend ஜீவாவும் சேர்ந்தே அவங்களோட பாடல்களை வெளில கொண்டு வந்து சேர்க்க பாத்தாங்க. ஒரு கட்டத்துல இனி நம்ம ஊருக்கே போய்டலாம்னு முடிவு பண்ணும்போதுதான் அவர் பாடின கிளப்புல மப்புல பாட்டு ஹிட் ஆகி அடுத்தடுத்து நெறய ஹிப்ஹாப் பாடல்கள பாட ஆரம்பிச்சாரு. வாடி புள்ள வாடி அப்படின்ற ஒரு Album Song மக்கள் கிட்ட அவர இன்னும் அதிகமா கொண்டு சேர்த்துச்சு.

முதல் முதல்ல சினிமால எதிர்நீச்சல் படத்துல அனிருத் ஓட ம்யூஸிக்ல பாடினதுக்கப்றம் ஒரு சில இசையமைப்பாளர்களோட வேலை செய்ய… அடுத்த வாய்ப்பு விஷால், டைரக்டர் சுந்தர்.சி அவர்களோட ஆம்பள படம் மூலமா கிடைச்சுது. அதுல இசையமைப்பாளரா அறிமுகமானாரு. அந்த படம் ரிலீஸ் ஆன Time-அ விட இப்போ தான் அந்த படத்துல இருக்க Family song நிறைய பேர்கிட்ட Reach ஆச்சு.

அந்த படத்துல வந்த பாட்டு, HIPHOP தமிழாவோட Independent Songs இதெல்லாம் கேட்டுட்டு டைரக்டர் மோகன் ராஜா தனி ஒருவன் படத்துக்காக இசையமைக்கும்படி கேட்டப்போ, கொஞ்சம் தயங்கினாலும் நம்பிக்கையோட பண்ணலாம்னு சொல்லி சூப்பர் டூப்பர் HIT கொடுத்தாரு.

படங்களுக்காக மியூசிக் பண்றத தாண்டி பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம், தமிழ்நாடு மாநில தேர்தலுக்காக “எழுவோம்” அப்டின்னு ஒரு Official Anthem இசையமைச்சிருக்காரு. பெரும்பாலும் தன்னுடைய மெட்டுக்கு தானே வரிகளும் எழுதிடுவாரு HIPHOP ஆதி. அதுமட்டுமில்ல தமிழ் மொழி உருவான வரலாற தமிழி அப்படிங்குற ஒரு ஆவணப்படமா எடுத்து அதுக்கு இசையமைச்சு அதுக்காக தனியா ஒரு பாடலும் எழுதி பாடியிருக்காரு.

இப்போ இசை ஒருபக்கம் நடிப்பு ஒரு பக்கம்னு ஆல்பம் சாங்ஸ் ஒரு பக்கம்னு ரொம்ப பிஸி. அடுத்தடுத்து திரைப்படங்கள்ல நடிக்கறதோட நிறைய புது முகங்களுக்கும் வாய்ப்பு கொடுத்து தான் வளரும்போது தன்னுடன் இருக்கும் அனைவரையும் வளர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை என்றும் ரசித்து வாழும் HIPHOP ஆதி அவர்களுக்கு இன்னும் பற்பல வெற்றிகள் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் எடுத்திருக்கும், இனி எடுக்கப் போகும் அனைத்து பரிமாணங்களுக்கும் வந்து சேர வாழ்த்துக்கள்.

Article by RJ Vedha

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.