மாயக்கண்ணனின் குழலோசை தரும் மயக்கம் இவரின் குரலோசையும் தரும்… நம்ம கே.ஜே.யேசுதாஸ் அவர்களை பத்திதான் சொல்றேங்க…
இவருடைய குரல்ல என்னமோ Magic இருக்கு… இவருடைய இசை ஞானமும் குரல் வளமும் இறைவன் கொடுத்த Gift-னு பல Music Directors சொல்லி கேட்டிருப்போம். முதல் பாடலே ஜாதி பேதம் மத துவேஷம்-னு பாடினதுனாலயா என்னனு தெரில… எந்த பேதமும் இல்லாம குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றும் இவரோட பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கு.
இவர் பாடின ஒவ்வொரு பாட்டையும் எப்போ கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் நம்மளோட மனசு அந்த பாட்டோட ஒன்றிடும் … இறை பக்தி ரொம்ப அதிகமா இருக்கறதால என்னவோ இவரோட பக்தி பாடல்கள்ல உயிரோட்டம் எப்பவும் இருக்கும்…
அப்பா இசை கலைஞர் அப்படின்றதாலேயே சின்ன வயசுல இருந்து அதிகமான முக்கியத்துவம் படிப்பை தாண்டி இசைக்கு கொடுக்க வீட்லயும் சொல்லிருக்காங்க…
இளம் வயதுலயே சினிமா இண்டஸ்ட்ரிக்கு பாட தொடங்கிட்டாரு. பல வருடங்களா பாடிட்டு இருந்தாலும் எத்தனை பாடல்கள் பாடிருக்கோம்னு எண்ணிக்கை வெச்சுக்காததுக்கு ஒரு சின்ன Flashback இருக்கு… கே.ஜே.யேசுதாஸ் அவர்களும் S.ஜானகி அவர்களும் சேர்ந்து பாடுறப்போ ஜானகி அவர்கள் ஒரு டைரி வெச்சிருந்தாங்க… தன்னுடைய ஒவ்வொரு பாடலும் எங்க Record பண்ணது… எவ்ளோ டேக் எடுத்தது… எந்த தேதி-ல Record பண்ணதுன்னு ஒரு சின்ன Data Base இருக்குமாம்.
இதை பாத்துட்டு நாமும் ஏன் அப்டி பண்ண கூடாதுனு சில நாட்கள் டைரியில் எழுதியும் வெச்சி Maintain பண்ணிருக்காரு யேசுதாஸ். ஆனா ஒரு சில மாதங்கள் கழிச்சு இரண்டு டைரி காணாமலே போய்டுச்சு… அதுல இருந்து இனி எத்தனை பாடல்கள் பாடிருக்கோம்னு கணக்கு எல்லாம் வெச்சுக்க வேணாம் என்று முடிவுக்கு வந்திருக்கார்.
அவர் கணக்கெடுக்கலானாலும் நம்ம அவரோட அருமைய தெரிஞ்சுக்கவும், அவர் புகழை சொல்லவும் எடுக்கலாம்ல… கிட்டத்தட்ட எழுபதாயிரம் பாடல்கள் மேல பாடிருக்காரு… இன்னமும் கண்ணே கலைமானே , பூவே செம்பூவே , அகரம் இப்போ சிகரம் ஆச்சு இன்னும் பல பாடல்கள் Evergreen Songs-ஆ எல்லா Generations-ம் ரசிக்கற விதமா இருந்துட்டிருக்கு.
எத்தனையோ விருதுகளை வாங்கி இவர் திரை பயணத்தில் சாதனை படைத்திருந்தாலும் விருதுகளை தாண்டி மக்களின் அன்பையே பெரிதாக நினைக்கும் பத்ம விபூஷண் கே.ஜே. யேசுதாஸ் அவர்களுக்கு இன்னும் நிறைய அன்பும் பற்பல வெற்றிகளும் வந்து சேர மனம் நிறைந்த வாழ்த்துக்களை அவர் பிறந்தநாள் அன்று சூர்யன் FM தெரிவிக்கிறது.
கே.ஜே. யேசுதாஸ் அவர்களுடைய எந்த பாடல் உங்களுடைய Favourite என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்!