என்னதான் தமிழ்ல காலம் காலமா சாதிக்கு எதிரான கருத்துக்கள், இல்ல கதைகள் கொண்ட படங்கள் வந்தாலும் நிஜத்துக்கு நெருக்கமான அரசியல தன்னோட படங்கள்ல வச்சு பல விவாதங்களை ஏற்படுத்தியவர்தான் பா ரஞ்சித்.
சினிமாக்கு புதுசா ஒரு Direction போட்டாருனு தான் சொல்லனும். I mean வழி-ய சொன்னேன். டிசம்பர் 8, 1982 திருவள்ளூர்-ல பிறந்தாரு. இவர இப்ப பேர் சொல்லி கூப்பிட்டத விட அட்டக்கத்தி ரஞ்சித்-னு தான் எல்லாரும் கூப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இவர் எடுத்த முதல் படமே பயங்கர ஹிட்டு.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்கள்தான் இவர அடையாளம் காட்டுச்சு. இவர் படங்கள் பத்தி விமர்சனம் வந்தத விட இவர பத்தி தான் அதிக விமர்சனங்கள் வரும். ஆனாலும் மனுசன் எதையுமே கண்டுக்காம தன்னோட சினிமா வாழ்க்கைய பத்தியே யோசிச்சு அடுத்தடுத்து ஹிட் குடுத்துட்டே இருந்தாரு.
ஏன்…! பெரிய பெரிய இயக்குநர்களுக்கே Superstar கூட படம் பண்ணனும் அப்படிங்குறது ஆசை, ஆனா இவரோட இயக்கத்த பார்த்துட்டு Superstar இவருக்கு வாய்ப்பு கொடுத்தாரு.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது இப்படி இயக்குனரா மட்டும் இல்ல… பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே பேபி, சேத்துமான் படங்களின் தயாரிப்பாளராவும் இருந்திருக்காரு.
ஒடுக்கப்பட்ட மக்களோட குரலா ஒலிக்கிற இவரோட குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா.ரஞ்சித்!