நம்ம ஊருல காதல் என்னும் தேர்வு எழுதி காத்திருந்த மாணவர்கள் நெறைய பேர் இருக்கோம். ஆனா காதல் தேர்வும் வேண்டாம், அந்த தேர்வோட ரிசல்ட்டும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்னு, சுத்து வட்டாரத்துல இருக்க சிங்கிள்ஸ் எல்லாருக்கும் Boss-ஆ இருக்கவரு தான் நம்ம பண்ணைபுரத்து வாரிசு பிரேம்ஜி கங்கை அமரன்.
பிரேம்ஜிய நாம நிறைய படங்கள்ல காமெடியன் கதாபாத்திரத்துல பாத்துருப்போம், ஆனா இசை குடும்பத்துல பிறந்த இவருக்குள்ளேயும் இசைக்கடல் ஓடிட்டு இருக்கு. ஒரு பக்கம் அண்ணன் வெங்கட் பிரபு பல படங்கள்ல நடிச்சிட்டு இருந்தாரு, இன்னோரு பக்கம் நம்ம பிரேம்ஜி பண்ணைபுரத்தோட மற்றொரு வாரிசான யுவன் சங்கர்ராஜா கூட கீபோர்ட் ப்ளேயரா இருந்தாரு.
யுவனோட பல படங்களுக்கு பிரேம்ஜி தான் கீபோர்ட் ப்ளேயர், அதோட மணிசர்மா, ஹாரிஸ் ஜெயராஜ் இப்படி பலருக்கும் பிரேம்ஜி மியூசிக் பண்ணியிருக்காரு. பிரேம்ஜி இசைப்பயணம் இப்படி போய்ட்டு இருந்தப்போ , அவருக்குள்ள இருந்த நடிகர் 2006-ல வந்த “வல்லவன்” படம் மூலமா தமிழ் சினிமால அறிமுகம் ஆகுறாரு.
ஆரம்பத்துல “புன்னகை பூவே”, “கண்டநாள் முதல்” போல சில படங்கள்ல ரொம்ப கம்மியான நேரம் வந்துட்டு போயிருக்காரு, ஆனா வல்லவன்ல தான் நயன்தாரா ப்ரெண்டா ரொம்ப நேரம் கதையோட பயணிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. 2007ல பிரேம்ஜியோட அண்ணன் வெங்கட் பிரபு “சென்னை 28” படம் மூலமா இயக்குனரா அறிமுகம் ஆகுறாரு.
இளைஞர்கள் பட்டாளத்தோட தமிழ் சினிமால இயக்குனரா வந்த வெங்கட் பிரபுக்கு, வெற்றிக் கொடி கட்டினாங்க நம்ம ஊரு சினிமா ரசிகர்கள். இந்த படத்துல நம்ம பிரேம்ஜியோட நடிப்பு, டயலாக் டெலிவரிலாம் இப்ப வரை நம்மள சிரிக்க வைக்கும். குறிப்பா இந்த வசனம், “என்ன கொடுமை சார் இது”.
அண்ணனோட சென்னை 28-ல ஆரம்பிச்ச நடிப்பு பயணம் வெங்கட் பிரபு படம்னா, பிரேம்ஜி இல்லாம இருக்காதுனு ரசிகர்களே சொல்ற அளவு இப்ப வரை தொடர்ந்துட்டு இருக்கு. பிரேம்ஜின்ற பெயர கேட்ட உடனே நமக்கு சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, கோவா, மங்காத்தா, சேட்டை, பிரியாணி, மாஸ், மாநாடு இப்படி பல படங்கள் நியாபகம் வரும்.
சரோஜா, மங்காத்தா படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகர் விருதும் வாங்கியிருக்காரு பிரேம்ஜி. கதாநாயகனா மாங்கா, தமிழ் ராக்கர்ஸ், நாரதன் போன்ற சில படங்கள்ல நடிச்சிருக்காரு. இப்படி நடிகனா, கீபோர்ட் ப்ளேயரா நமக்கு தெரிஞ்ச பிரேம்ஜி இல்லாம இவருக்கு பாடகர், இசையமைப்பாளர்னு வேறு முகங்களும் இருக்கு.
சொல்லப் போனா சென்னை 28 படத்துல ஆரம்பத்துல இசையமைக்க இருந்தது பிரேம்ஜி தான். அந்த வாய்ப்பு கிடைக்கலனாலும், துணிச்சல், நெஞ்சத்தை கிள்ளாதே, அதே நேரம் அதே இடம், என்னமோ நடக்குது, ஆர் கே நகர், கசடதபற, பார்ட்டி, மன்மத லீலைனு பல படங்களுக்கு இசையமைச்சிருக்காரு.
அது ஒரு காலம் அழகிய காலம், மீசை கொக்கு தான், கொடிமாங்கனி, பப்பரமிட்டை கலரு இது மாதிரி பல பாடல்கள் பிரேம்ஜி இசைல சூப்பர் ஹிட். பிரேம்ஜியோட Rap and Remix பாட்டுக்கு இங்க பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கு. திருப்பாச்சில வர Oh My கடவுளே Rap, Jalsa பண்ணுங்கடா Rap, தீப்பிடிக்க பாடல், பிரியாணி Remix போல எக்கச்சக்க பாட்டு சொல்லிட்டே போலாம்.
இப்படி இசையமைப்பாளரா, பாடகரா, காமெடியனா, கதாநாயகனா எவ்வளவோ பண்ணிட்ட பிரேம்ஜி இத பண்ண மாட்டோமானு இன்னும் திரைத்துறைல பல அவதாரங்கள் எடுக்க சூரியன் FMன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.