Hi… எனக்கு சின்ன வயசுல ஸ்கூலுக்கு போறதுன்னா ரொம்ப பிடிக்கும். ஏன்னா எனக்கு மணி அப்டினு ஒரு குளோஸ் ஃப்ரெண்ட் இருந்தான். அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவன் என் பக்கத்துல தான் உக்காரனும். அவன் என் கூட தான் சாப்பிடணும்னு சொல்லிட்டு நிறைய அடம் பிடிப்பேன். ஒரு நாள் அப்பா வேலை பார்க்கிற பேங்க்ல அப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் கொடுத்துட்டாங்க. அரியலூரில் இருந்து பாண்டிச்சேரி போக வேண்டிய கட்டாயம், அப்ப எனக்கு இருந்த ஒரே கவலை மணிய விட்டுட்டு போறேன்ற கவலை தான்.
புது ஸ்கூல் புது இடம் எதுவுமே கொஞ்சம் நாளைக்கு செட்டே ஆகல. அப்புறம் ஸ்கூலிங் எல்லாம் முடிச்சுட்டு காலேஜ் போய் சேர்ந்தேன். காலேஜ் படிக்கும்போது ஒரு பையன எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. அவன் பேசுறது, அவன் மத்தவங்கள நடத்துற விதம், இப்படி சொல்லிட்டே போலாம். எல்லாமே புடிச்சிருந்துச்சு அவன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தேன்.
ஆனா அது அவனுக்கு தெரியாது. அட்லாஸ்ட் அவன் என்னோட லவ்வ ஏத்துக்குறப்போ காலேஜ் லைஃப் முடிஞ்சிடுச்சு. அவன் வேலை விஷயமா ஆஸ்திரேலியா போயிட்டான். சோ லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் ஆயிடுச்சு.
நானும் சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துட்டேன். கொஞ்ச நாள்ல போர் அடிச்சுது. மீடியால சேரனும்னு ஆசையா இருந்துச்சு, அத வீட்ல சொன்னப்போ எல்லார் வீட்லயும் சொல்ற மாதிரி பொண்ணு உனக்கு எதுக்கு மீடியா வேண்டாமே அப்படின்னு சொன்னாங்க, இருந்தாலும் நான் இது தான் பண்ண போறேன்னு சொல்லும்போது தடையாய் யாரும் வந்து நிக்கல.
எனக்கு ஒரு டிவியில நியூஸ் ரீடர் வேலை கிடைச்சுது. அந்த வேலையை பார்த்துட்டே இருந்தேன். வேலைக்கு சேர்ந்த புதுசுலையே லைவ் ஷோ-லாம் கொடுத்தாங்க. அங்க இருக்க சீனியர் எல்லாரும் புது பொண்ணுக்கு ஏன் இதை தரீங்க, இவங்க இதை பண்ணுவாங்களா? அப்படின்னு யூசுவல் ஆபீஸ் பாலிடிக்ஸ் இருந்துச்சு.
அப்புறம் ஒரு 4 வருஷம் கழிச்சு இன்னொரு டிவி சேனல்ல சீரியல்ல ஆக்ட் பண்ண கூப்பிட்டிருந்தாங்க. அந்த சீரியல் எனக்கு ஓஹோன்னு பேர வாங்கி கொடுத்துச்சு. அதுக்கப்புறம் அந்த டிவியில் ஏகப்பட்ட ஷோவ Host பண்ற வாய்ப்பு எனக்கு கிடைச்சுது. 2011-ல் ஆரம்பிச்ச என்னுடைய மீடியா பயணம் 2017-ல சினிமாவுல கொண்டு வந்து நிப்பாட்டுச்சு.
நான் நடிச்ச முதல் படம் எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்துச்சு. ஆனா இவ்வளவு விஷயங்கள் கடந்தும் என் காதலன் ராஜவேலு இதுக்கு எந்த ஒரு தடையும் தெரிவிக்கல. உனக்கு பிடிச்சத பண்ணுன்னு ஆஸ்திரேலியாவில் இருந்து எனக்கு சப்போர்ட் பண்ணிட்டே இருந்தாரு.
அப்புறம் 2018-ல ஒரு படம், அடுத்து ஒரு படம், அடுத்து ஒரு படம், அடுத்து ஒரு படம் இப்போ இந்தியன் 2 வரைக்கும் நான் நடிச்சுட்டு இருக்கேன். இந்த நேரத்துல எல்லாரும் என்கிட்ட கேக்குற கேள்வி உங்களுக்கு எப்ப கல்யாணம்? அதுக்கு நான் சொல்ற பதில் எனக்குன்னு ஒரு GOAL இருக்கு; அந்த GOAL-அ நான் அடையனும்; அதுக்கு என்னோட ராஜவேலு உறுதுணையா இருக்காரு.
அதனால நான் சாதிக்கிற வரைக்கும் ராஜவேலு காத்துட்டு இருப்பார். ஆனா கண்டிப்பா ஒரு நாள் நீங்க எல்லாரும் எங்க கல்யாணத்த பார்க்க தான் போறீங்க. அதுல எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படிக்கு பவானி சங்கர் என்ற தந்தைக்கும், தங்கம் பவானி சங்கர் என்ற தாய்க்கும் பிறந்த பிரியா பவானி சங்கர் என்கிற சத்திய பிரியா பவானி சங்கர்.