அதிகாலை நான்கு மணி, முதல் நாள் முதல் காட்சி, தியேட்டர் உள்ளே வெளியே என அளப்பரிய கொண்டாட்டம். படம் நிறைவு பெறுகிறது. ரெட்டை மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேறுகிறார்கள்.
அப்பொழுது திடீரென்று ஒரு அம்மா Theatre சீட்டில் தன் நான்கு வயது மகனை Seat மேல் நிறுத்தி அவன் போட்டு வந்திருந்த சட்டையை கழற்றி, ஸ்கூல் யூனிபார்மை மாற்றி விடுகிறார். தன் குழந்தைக்கு தலை சீவி பள்ளிக்கு செல்ல தயார் செய்கிறார். Theatre-ல் ஓடும் பாட்டிற்கு ஆடிய படியே அந்த சிறுவனும் சந்தோஷத்துடன் ஆடிக்கொண்டே யூனிபார்ம் அணிந்து கொண்டு பள்ளி செல்ல தயாராகிறார். அதுதான் ரஜினி படம்.
இப்படி எல்லா வயசுலயும் ரஜினிக்கு ரசிகர்கள் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான். பிளாக் & ஒயிட், கலர், 3D, அனிமேஷன் என தமிழ் சினிமா இதுவரை கண்டுள்ள அத்தனை Format-லும் நடித்தவர் என்பது இன்னும் சிறப்பு, சிலருக்கு ஆச்சர்யம். வெற்றி பெறுவது கடினம், ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்து வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பது அதை விட கடினம். அத ரொம்ப அசால்ட்டா செஞ்ச நடிகர் சூப்பர் ஸ்டார்.
தன்னுடைய தோல்வி படத்தின் வசூல் கூட பல நாயகர்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலா இருக்கும். அப்படி அவர ரசிகர்கள் நேசித்ததும், அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு ஏதாவது வித்தியாசமா அவங்க ரசிக்கும்படி நடிச்சிட்டு சந்தோஷத்தை கொடுத்துட்டே இருக்கணும்னு அவர் நேசிக்கிறதும் என இப்படி இந்த 47 வருஷமா அன்பு சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
தாதா சாகிப் பால்கே, பத்மபூஷன், பத்மவிபூஷன், தேசிய, மாநில விருது என எத்தனையோ விருதுகள் வாங்கினாலும் அத்தனை விருதுகளையும் விட சூப்பர் ஸ்டார்னு திரைல அவர் பெயர் வரும் பொழுது வரக்கூடிய ரசிகர்களின் ஆரவாரம் தான் அவருக்கும் மகிழ்ச்சி, ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.
வெறும் சினிமாவுக்காக மட்டுமா அவரை மக்கள் கொண்டாடுகிறார்கள்? கிடையாது! நிஜத்திலும் அவரின் எளிமை பலர வியக்கவும், வணங்கவும் வைக்கிறது. இதுவரை தமிழ் சினிமா கண்ட கதாநாயகர்கள் திரையில் எப்படி தெரிகிறோமோ, அதே போல நிஜத்திலும் தெரிய வேண்டுமேன ரொம்ப மெனக்கிடுவார்கள். ஆனால் திரையில் மிக Stylish-ஆக இருக்கும் சூப்பர் ஸ்டார், நிஜத்தில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையான அழகுடன் இன்னும் Stylish-ஆக பலருக்கு இன்ஸ்பிரேஷன் ஆகவும் வாழ்கிறார்.
அந்த காலத்துல கருப்பா இருக்கிறவங்களுக்கு ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கும், அதை உடைத்தெறிய செய்தவர் சூப்பர் ஸ்டார். அநியாயம் நடக்கிற இடத்துல தட்டி கேக்கணும்னு உத்வேகம் கொடுத்தது அவருடைய வசனங்கள் தான். தீவிர சோகமாக இருந்தாலும் சரி, அதீத சந்தோஷமாக இருந்தாலும் சரி, எதற்கும் கலங்கிடவோ, ஆடிடவோ கூடாதுன்னு எளிமையையும் நிம்மதியையும் தன் வாழ்வின் மூலம் கற்றுத் தருகிறார் சூப்பர் ஸ்டார்.
எந்த சூழ்நிலையிலும் பொய் பேசுவதும், பிறரை பற்றி புறம் பேசுவதையும் விரும்பாத சூப்பர் ஸ்டார், தன் ரசிகர்களையும் அப்படி இருக்க சொல்கிறார். திரைத்துறையில் சிறியவரோ பெரியவரோ, அறிமுகமோ அனுபவசாலியோ, அவர்கள் எதாவது புதுமை செய்திருந்தால் மனமுவந்து பாராட்டி அவர்களை ஆச்சர்யப்படுத்தும் அபூர்வம் சூப்பர் ஸ்டார்.
திரையில் இவர் பேசிய வசனங்களை தங்கள் வாழ்வின் நெறியாக கொண்டு வாழ்ந்த ரசிகர்கள் ஏராளம். வசனம் எழுதியவர்கள் வேறு யாரோவாக இருக்கலாம், ஆனால் அவர் பேசும் போது அந்த வார்த்தைகளுக்கு வேறு பரிணாமங்களை கொடுக்கிறார். பெரிய வசனங்களை விடுங்கள், “மகிழ்ச்சி” என்ற ஒற்றை வார்த்தை கூட அவர் உச்சரித்த பின் அந்த மகிழ்ச்சி நம் மனதில் படர்வதை உணர முடியும்.
இதுவரை சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து லட்சம் பேர் புகைப்படம் எடுத்திருப்பார்கள், அத்தனை பேரும் அவரை சந்தித்த நிகழ்வை ஒரு பாசிட்டிவான நிகழ்வாக வியந்து தான் சொல்வார்கள். அப்படி பாசிட்டிவிட்டியை Spread பண்ணக்கூடிய அந்த மாமனிதனிடம் இன்னும் கோடி பேர் புகைப்படம் எடுக்க நினைப்பதில் ஆச்சரியம் இல்லையே!
Keep Inspiring தலைவா..! HAPPY BIRTHDAY