2015 மே 29 ஆம் தேதிக்கு முன்னாடி வரைக்கும் மலர் அப்டின்னு சொன்னா ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச மலர்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா அந்த தேதிக்கு அப்புறம் எல்லாருக்கும் ஞாபகம் வர ஒரே மலர் நம்ம மலர் டீச்சர்… அட நம்ம சாய் பல்லவி தாங்க…
வழக்கமா ஹீரோயின் அப்படின்னு சொன்னாலே ஸ்கிரீன்ல வரும்பொழுது மேக்கப் போடுறது அப்படிங்கறது ரொம்ப சாதாரணமான ஒரு விஷயம். மேக்கப் இல்லாம ஏதாவது ஒன்னு இல்லனா ரெண்டு சீன்கள்ல தேவைப்படும் பொழுது appear ஆகுறவங்க உண்டு. ஆனால் ஒரு முழு படத்தையும் அதுவும் தன்னுடைய முதல் படத்திலேயே டைரக்டர் சொன்ன அந்த வார்த்தைக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மேக்கப் போடாமல் நடிச்சவங்க தான் சாய் பல்லவி.
அதை மக்களும் விரும்பி ஏத்துக்கிட்டதால பெரும்பாலும் சாய் பல்லவி தன்னுடைய படத்துல மேக்கப் இல்லாமல் நடிக்கிறாங்க. அதைவிட முக்கியமான ஒரு விஷயம் சாய் பல்லவி இன்னைக்கு வரைக்கும் எந்த ஒரு Fairness cream விளம்பரங்கள்லயும் நடிக்கல . காசு எவ்வளவு கொடுத்தாலும் இந்த ஒரு விஷயத்தை நான் பண்ண மாட்டேன் அப்படினு சொல்லி இருக்காங்க.
காரணம் அவங்களுடைய தங்கச்சியே பல நேரங்களில் தன்னுடைய Skin Tone பற்றியும் தன்னுடைய அழகு பற்றியும் தாழ்வு மனப்பான்மையோடு பல நாள் இருந்துருக்காங்க… அந்த சமயத்துல நம்ம முகத்துக்கு மேல ஏதாவது அப்ளை பண்றதை விட நம்ம சாப்பிடுற சாப்பாடும் நம்ம எடுத்துக்கிற பழங்களும் நம்மளோட சருமத்த ஹெல்த்தியா வச்சுக்கும் அப்படின்னும் தான் எப்பவுமே தங்கச்சி கிட்ட சொல்லி இருக்காங்களாம் சாய் பல்லவி.
இந்த ஒரு விஷயத்த தங்கச்சி கிட்ட சொல்லிட்டு Fairness Cream விளம்பரங்களில் நடிச்சா அது சரியா இருக்காது. அதோட இந்த ஒரு விஷயத்தை எல்லாருக்கும் சொல்லணும் அப்படிங்கிறதுக்காக தான் இந்த மாதிரி விளம்பரங்கள்ல நடிக்கிறது கிடையாது அப்படின்னும் சொல்லி இருக்காங்க.
இவ்வளவு சூப்பரா அழகா நடிக்குற சாய் பல்லவி ஒரு டாக்டருங்க. ஆமா எம் பி பி எஸ் முடிச்சுருக்காங்க, இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே டான்ஸ் மேல பெரிய ஈடுபாடு உடையவங்க. பல ரியாலிட்டி ஷோஸ்ல கலந்துக்கிட்டவங்க. ஒரு நாள் பிரபுதேவா அவங்களுடைய Choreography-இல் ஆடுவாங்க அப்படிங்கிறது அவங்க நினைச்சு கூட பார்க்காத ஒரு விஷயம்.
ஆனா பிரபுதேவா அவர்கள் Choreograph பண்ண வர்றதுக்கு முந்திய நாள் மாஸ்டர் வராங்களா?? அப்படின்னு கேட்டு பயந்து அழுது இருக்காங்கலாம். சாய் பல்லவிக்கு அவ்வளவு பயம் இருந்தாலும் பிரபுதேவா அவர்கள் சொன்னத எந்த அளவுக்கு அப்படியே கொடுக்க முடியுமோ அப்படியே கொடுத்து… அந்த பாட்டும் சரி அந்த பாட்டோட Beat-க்கு இவங்க ஆடின விதமும் சரி எல்லாமே சேர்ந்து Youtube-ல கிட்டத்தட்ட 1.4 Billion Views போயிருக்கு.
அதுதான் “ரவுடி பேபி” பாட்டு. இந்த பாட்டு இவங்க இதுக்கு முன்னாடி ஆடின “Vachinde” அப்படிங்கற ஒரு தெலுங்கு பாட்டோட ரெக்கார்ட பிரேக் பண்ணியிருக்கு. இன்னைக்கும் இவங்களுடைய டான்ஸ்க்கு ஒரு பெரிய Fanbase இருக்காங்க. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லணும்னா நம்ம எல்லாருக்குமே தெரியும் சாய் பல்லவி எந்த ஒரு விருது வாங்குற விழாவுக்கு போனாலும் எப்பவுமே புடவை கட்டிட்டு போவாங்க அப்படின்னு.
இதற்கான காரணம் என்ன அப்படின்னா சின்ன வயசுல இருந்தே அவங்க நம்பின ஒரு விஷயம் பெண்கள் வந்து ஒரு கடவுளுக்கு சமம் ஒரு goddess. அப்படின்னா அவங்க புடவை கட்டிக்கிட்டு இருப்பாங்க. அதே மாதிரி நீளமான முடி வச்சிருப்பாங்க அப்படின்னு நினைச்சுருக்காங்க.
இந்த ஒரு விஷயத்த சின்ன வயசுல இருந்தே நம்புறதுனால இன்னைக்கும் அத Follow பண்றாங்க. சாய்பல்லவி நடிக்கிற படங்கள் எல்லாமே வெற்றி அடையனும் அவங்க எடுக்குற முயற்சி எல்லாமே அவங்களுக்கு சாதகமா முடியனும் அப்படின்னு அவங்களுடைய பிறந்தநாள் அன்னைக்கு சூரியன் FM வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறது.