தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி வரலாறே இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
அவரது ஒவ்வொரு காமெடியிலும் கலை நயமும் கருத்தும் இருக்கும். அதற்கு அடுத்து வந்த சந்திர பாபு தொடங்கி நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு இறுதியாக சந்தானம் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த காமெடி வெடி இவர். மன்மதனில் தொடங்கி இன்று குளு குளு வரை கவுன்ட்டர் ‘கிங்’காக இந்த கோடம்பாக்கத்தை வலம் வருகிறார் இந்த காமெடி கிங். தமிழ் சினிமாவில் காமெடியனாக தனது பயணத்தை துவங்கி, அதன்பின் ஹீரோவாக மாறியவர் சந்தானம்.
கிக் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ள சந்தானம் அடுத்ததாக மீண்டும் காமெடியனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி வறட்சி இவர் வரவால் தீரும் என்று உறுதியாக ரசிகர்களால் நம்பப்படுகிறது. அதன்படி, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ஏகே 62 படத்தில் தான் சந்தானம் நடிக்க போவதாக கூறப்படுகிறது.
ஆனால், இப்படத்தில் அவர் காமெடியனாக தான் நடிக்கிறாரா என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும் அவரது காமெடியன் பாத்திரம் தான் அவருக்கு இனி கைகொடுக்க போகிறது என்பதில் ஐயமில்லை.
இந்த பிறந்த நாள் ‘பழைய பன்னீர் செல்வமா’ அவரை தமிழ் சினிமாவுக்கு தரும் என்ற நம்பிக்கையோடு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். Happy Birthday Santa! ஹீரோவோ காமெடியோ இறங்கி அடிங்க.. கி(க்)ங்கா…