சும்மா சொல்லிட முடியாது இவர பத்தி கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்றேன்.
இருக்கு ஆனா இல்ல… இருக்குற மாரி இருக்கு, ஆனா இல்ல என்ற வசனம் மூலமா நம்ம மனசுல இடம்புடிச்சவரு. இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்-னு தமிழ் சினிமால நிறைய அவதாரம் எடுத்தவரு.
Yes, எஸ். ஜஸ்டின் செல்வராஜ் என்ற எஸ்.ஜே. சூர்யா வுக்கு தான் இன்னைக்கு பிறந்தநாள். சங்கரன்கோவில் பக்கத்துல வாசுதேவநல்லூர் தான் அவரோட சொந்த ஊர். சினிமா யாருக்கு தான் புடிக்காது? சினிமா தான் இனி நான் வாழ போற வாழ்க்கைனு நம்பிக்கையோட சென்னை வந்தாரு.
நடிகராகணும்னு அப்போவே Fix பண்ணிட்டாரு. ஆனா All Rounder ஆக போறாருனு அவருக்கு அப்போ தெரியாது. சில படங்கள்ல உதவி இயக்குனரா வேலை பாத்தாரு. வாலி படம் மூலமா இயக்குனர் அவதாரம் எடுத்தாரு. குஷி படம் மூலமா அடுத்த ஒரு மிகப்பெரிய வெற்றி அவருக்கு கிடைச்சுது.
இந்த 2 திரைப்படங்களுக்கு பின் தானே இயக்கி நடிக்கவும் தொடங்கிட்டார். இவர் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அவரோட நடிப்பு திறமையை முதல்முதலா வெளிக்கொண்டு வந்த படம் தான் 2004-ல வெளியான நியூ .
கற்பனைக்கு எட்டா கதைகளில், அவரின் நடிப்பால் விசில் சத்தங்களால் திரையரங்குகளை நிறைய வைத்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இயக்கம் ஒரு புறம் இருக்க, நடிப்பில் ஹீரோ கதாபாத்திரங்களை விட வில்லன் கதாபாத்திரங்களில் அற்புதமாக நடிப்பார். வில்லன் கதாபாத்திரங்கள் இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..!
சமீப வருடங்களில், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை மாநாடு, டான் என பட்டய கிளப்பியிருக்கார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி, இறவாக்காலம், உயர்ந்த மனிதன் ஆகிய படங்கள் வரும் நாட்களில் வெளியாகவுள்ளது. மேலும் பல வெற்றிப் படைப்புகளை கொடுக்க The Power House of Talent SJ சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்!