எல்லாருமே வெற்றி அடைந்ததுக்கு அடுத்து வந்த பாராட்டுகள் தெரிஞ்ச அளவுக்கு, வெற்றி அடையறதுக்கு முன்னாடி பட்ட அவமானமும் கஷ்டமும் தெரியாது. அப்டிப்பட்ட வெற்றி தான் சரவணன் என்கிற சூர்யாவோட வெற்றி!
என்னதான் தன்னுடைய அப்பா சிவகுமார் தமிழ் சினிமால கொடி கட்டிப் பறந்தாலும், அவருக்குனு ஒரு சிம்மாசனம் அமைச்சு அதுல ராஜாவா இருந்தாலும், இளவரசனா சூர்யா தமிழ் சினிமால “நேருக்கு நேர்” படத்துல அறிமுகமானப்போ நிறைய விமர்சனங்களுக்கு ஆளானாரு.
சின்ன வயசுல இருந்து சுட்டியா வளர்ந்த நம்ப சூர்யா அவரோட ஸ்கூல்ல (Punctuality Leader)-அ இருந்தபோது லேட்டா வந்த அவர் தம்பி கார்த்தியையும் வெளில நிக்க வெச்சு Punishment-ம் வாங்கி கொடுத்திருக்காரு. அப்போவே அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா இருந்திருக்காரு நம்ம குட்டி “சிங்கம்”.
காலேஜ் முடிச்சுட்டு வெறும் 2000 ரூபா சம்பளத்துக்கு வேலை பார்த்த நம்ம சூர்யா தமிழ் இண்டஸ்ட்ரில முதல்முறையா “நேருக்கு நேர் “படத்துல அறிமுகம் ஆகுறாரு. ஒருத்தர் வெற்றிப் பாதைய நோக்கி பயணிக்கும்போது வர இன்னல்கள் போல இவருக்கும் வந்துச்சு.
என்ன சிரிக்கவே வர்ல, டான்ஸ் ஆட வர்ல, நீ எல்லாம் எப்டி நடிக்க வந்த? இப்படி கால் வெச்ச இடமெல்லாம் விமர்சனங்களை சந்திச்சாரு… அப்போ நிறைய பேருக்கு தெரில, அம்பு முன்னோக்கி வேகமா பாயனும்னா அதுக்கு அம்பு முதல்ல வில்லுக்கு பின்னோக்கி போகும்னு.
அந்த பின்னோக்கி போன அம்பு வேகமா தன்னோட இலக்க நோக்கி பாஞ்சுது… நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன்-னு தொட்டதெல்லாம் ஹிட். காக்க காக்க படத்துல அறிமுக சீன்ல அடிபடும், அதனால டூப் போட்டுக்கலாம்ன்னு இயக்குனர் சொன்னத மீறி மெனக்கெட்டு தானே பண்ணாரு…
2008-ல அப்பா, மகன் என முதல் முறையா இரட்டை வேடத்துல, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்துல “வாரணம் ஆயிரம்” படம் நடிச்சு ஹிட் குடுத்தார். இந்த படம் இன்னிக்கும் மனசுல இருந்து மறையாம பலபேர் மனசுல வாழ்ந்துட்டு தான் இருக்கு. பெரும்பாலும் எல்லாருடைய வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்க. அதேபோல என்னோட வெற்றிக்கு பின்னாடியும் ஜோ (ஜோதிகா) இருக்காங்கன்னு சூர்யா பல மேடைகள்ல சொல்லி இருக்காரு.
இன்னைக்கும் தனக்கு வரக்கூடிய கணவர் சூர்யா மாதிரி இருக்கணும்னு பல இளம் வயது பெண்கள் சொல்ல காரணம் சூர்யா Handsome-ஆ இருக்கிறது மட்டும் கிடையாது. அவர் அவருடைய மனைவிக்கு தரக்கூடிய மரியாதையும், காதலை வெளிபடுத்தும் விதமும் கூடதான். ஒரு சில படங்கள்ல சூர்யா தவிர வேற யார் நடிசாலும் செட் ஆகாது.
சூர்யாக்கு நிகர் சூர்யா மட்டுமேனு சில நடிகர்களும் பாராட்டியிருக்காங்க. அதுல ஒரு படம் தான் ஜெய் பீம். பல பேரோட மனசுல பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துச்சு… “பருந்தாகுது ஊர் குருவி”-னு சூரரைப் போற்று படத்தின் மூலமா பல இளைஞர்களுக்கு பெரிய நம்பிக்கையை குடுத்தாரு. “எவ்ளோ உயரம் -ன்றது முக்கியமில்ல, எவ்ளோ உயருறோம்-ன்றது தான் முக்கியம்”.
நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துகிறுவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிறுவானுக, ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது. அவ்ளோ முக்கியமான செல்வத்த பல ஏழை எளிய பிள்ளைகளுக்கு இலவசமா குடுக்குற சூரரை (சூர்யாவை) போற்றுவோம். இன்று பிறந்த நாள் காணும் சூர்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது சூரியன் FM.