என்னது 40 வயசா? அப்படின்னு எல்லாரும் ஆச்சரியமா வாய திறந்துட்டு இருக்காங்க… வயசு 40 பிளஸ் ஆனாலும் பியூட்டி குறையல! வயசு ஏற ஏற அழகு கூடிட்டே போகுது.
குழந்தை முதல் குந்தவை வரை எப்பவுமே திரிஷா கியூட் தான். இந்த அழகிக்கு 40 ஆகிடுச்சுனு நம்பவே முடியல. த்ரிஷானு சொல்லுறத விட குந்தவைனு சொன்னா தான் 2K Kids பாதிப்பேருக்கு தெரியுது. 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, கல்லூரி முடித்துவிட்டு, தன் நடிப்பை மேம்படுத்த ஆரம்பித்தார்.
த்ரிஷாவின் நடிப்பு அத்தனை அழகாக இருக்கும். இவரை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் பாடல் ‘அவள் உலக அழகியே’. இந்த பாடலில் வரும் அனைத்து வரிகளும் த்ரிஷாவுக்காவே எழுதப்பட்டது போல் இருக்கும்.
இவங்க மட்டும் எப்படி இவ்ளோ அழகா இருக்காங்க. வயசு ஆகா ஆகா அழகு கூடிகிட்டே போகுதேனு என்ன மாதிரியே உங்களுக்கும் டவுட் இருக்குல்ல. அதுக்கான Secret என்னனு கண்டுபுடிச்சுட்டேன். த்ரிஷா எப்போதுமே வெளி உணவுகளை எடுத்து கொள்ள மாட்டாராம். அதே போல் அதிக உப்பு நிறைந்த துரித உணவுகளையும் சேர்த்து கொள்ள மாட்டார்.
ஷூட்டிங் செல்லும் போது கூட வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே பேக் செய்து எடுத்து செல்வாராம். புரொடக்ஷன் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவாராம். சோ உணவு முறை தான் அவங்க அழகுக்கு கரணம்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்.
த்ரிஷா தன்னோட ரசிகர்கள பாத்து உயிர் உங்களுடையதுனு பொன்னியின் செல்வன் மேடைல சொன்னாங்க… அதே மாதிரி தான் ரசிகர்கள் நாங்களும் சொல்றோம்… உயிர் உங்களுடையது த்ரிஷா. Happy Birthday குந்தவை