12 வயசுல ஒரு பிஞ்சு தென்றல் தன்னோட இசை பயணத்த தொடங்கினப்போ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க, இவர் ஒரு பெரும் தமிழ் திரை இசை ரசிகர்களை தன்னோட விசிறிகளா மாத்த போறாருன்னு. ஆனா 5 ஜூலை 2001 அன்று இவரோட முதல் திரைப்பட இசை வெளியானது. ஆனா அதுக்கு முன்னாடியே இவரோட இரண்டாவது படத்தோட இசை 12 ஜனவரி 2001 வெளியாகி ஒரு பெரும் ஈர்ப்ப தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொடுத்து இருந்துது.
ஆமாங்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் முதல்ல மஜ்னு திரைப்படத்துக்கு தான் இசையமைச்சாரு. ஆனா, அதுக்கு முன்னாடியே மின்னலே படம் வெளியாயிடுச்சு. எது எப்படியோ, 2001 ஆம் ஆண்டில இருந்து இப்போ வரைக்கும் இவரோட இசை நம்மள மயக்கி வைச்சிருக்கு, ஆட வைச்சிருக்கு, அழ வைச்சிருக்கு, உருக வைச்சிருக்கு. வாலி, வைரமுத்து, தாமரை, நா. முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி, மதன் கார்க்கின்னு தமிழ்ல பாடலாசிரியர்களோட இணைந்து இவர் கொடுத்த பாடல்கள் எல்லாமே இளைஞர்களுக்கு பிடிச்ச மாதிரியும், உண்மையான வரிகளுக்கு இயல்பான இசையாவும் ஈர்ப்பவை.
அப்படிப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களோட பாடல்களை இன்று அவர் பிறந்த நாளில் கேட்டு கொண்டாடலாம். கம்பியூட்டர் இசையில காலத்துக்கு ஏத்த மாதிரியான மாறுதல்கள் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜோட ஆரம்பக்காலத்துல வெளிவந்த சிறந்த பத்து பாடல்கள் இங்கே:
மின்னலே – வசீகரா
மஜ்னு – முதற் கனவே
சாமுராய் – ஆகாய சூரியனை
லேசா லேசா – ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
சாமி – கல்யாணம் தான் கட்டிக்கிட்டு
காக்க காக்க – உயிரின் உயிரே
உள்ளம் கேட்குமே – ஓ மனமே
வேட்டையாடு விளையாடு – பார்த்த முதல் நாளே
பீமா – முதல் மழை
வாரணம் ஆயிரம் – அனல் மேலே பனித்துளி
புரியிது, ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களோட மனசுல அவரோட இசையில சிறந்த பத்து பாட்டு சொல்லுங்கன்னு கேட்டா, பதில் சொல்ல முடியாது தான். ஏன்னா, அவரோட ஒவ்வொரு படங்கள்லயும் அவ்வளவு சிறந்த பாடல்கள் கொடுத்துக்கிட்டே இருக்காரு. கஜினி படத்துல சுற்றுவிழி சுடரே, அயன் படத்துல விழி மூடி யோசித்தால், ஆதவன் படத்துல வாராயோ வாராயோ, எங்கேயும் எப்போதும் படத்துல எங்கேயும் காதல், இரண்டாம் உலகம் படத்துல என் காதல் தீ , ஏழாம் அறிவு படத்துல முன் அந்தி சாரலேன்னு காதல் மெல்லிசை கொடுத்தவர், காதல் யானை வருகிற ரெமோன்னு விக்ரமுக்கும், டங்காமாரி உதாரின்னு தனுஷ்க்கும் வெஸ்டர்ன் பாட்டு, குத்துப்பாட்டுன்னும் கலக்கி இருக்காரு. துருவ நட்சத்திரம் படத்துக்கு ஒரு மனம்ன்னு ஒரு பாட்டு கொடுத்து இருக்காரு, திரைக்கு அந்த படம் வரட்டும்ன்னு காத்திருப்போம். அதுவரை அவர் இசையில மூழ்கி இருப்போம்.
ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு சூரியன் FM-ன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.