உண்மையான கேஜிஎஃப் படத்துல வர மாறி பில்ட் அப் குடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்! அனிருத் இந்த பேர்ல இருக்குற சக்திய யாரும் அந்த டைம் ல புரிஞ்சுக்கல , சின்ன பையன் சார் என்ன பண்ணிடா போறான்னு சொல்லிட்டு இருந்த நேரம். ஒரு பாட்டு சார், ஒரே பாட்டு தான்… ‘Why this கொலவெறி டி’ னு அதுக்கு அப்பறம் நடந்த எல்லாமே வரலாறுல நம்ம எழுதுற நிகழ்வுகள் தான்.
கட் பண்ணா 11 வருஷம் அப்றம் இந்தியால இருக்குற எல்லா பெரிய கதாநாயகர்களுக்கும் நம்ம அனிருத் தேவை இருக்கு. அனிருத் இல்லனா படம் வேணாம்னு சொல்ற அளவுக்கு வந்து நிக்குறாரு. முழுக்க முழுக்க என்னோட கருத்து இது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹமான்-க்கு அப்பறம் எதிர்ல போட்டியளாரே இல்லாம இருக்குற ஒரு இசை கலைஞர் அனிருத் தான். இத எல்லாரும் ஒத்துப்பாங்கனு நினைக்கிறேன்.
அனிருத்-ஓட வெற்றியா நான் பாக்குறது என்னனா நிறைய டைரக்டர்ஸ் இன்டர்வியூ-ல சொல்லிருக்காங்க ’அனிருத் சின்ன சீன்ல ஸ்டார்ட் பண்ணி பெரிய சீன்ஸ் வரைக்கும் அவர் தான் முழுசா வொர்க் பண்ணுவாரு. அசிஸ்டெண்ட் கிட்ட குடுக்குற வேலையே இருக்காது’ன்னு. இதுல இருந்தே அந்த மனுஷன் தான் பண்ற வேலைய எவ்ளோ லவ் பண்றாருன்னு நல்லாவே தெரியுது.
நம்ம எல்லாருக்கும் அனிருத்-அ நேர்ல மீட் பண்ணனும், அவரோட பாடல்கள கேக்கனும் அப்படிங்குறது பெரிய ஆசையா இருக்கும். ஆனா அனிருத்துக்கு ஒரு ஆசை சின்ன வயசுல இருக்கும்ல… அது என்ன தெரியுமா? அனிருத் சின்ன வயசுல இருந்து ஒருத்தரோட படத்த Theatre-ல பாத்து, அவருக்கு வெறித்தனமான Fan-ஆ மாறி, அவரோட படத்துக்கே இசையமைக்குற வாய்ப்ப உருவாக்குறாரு.
அவர் ரசிச்ச அந்த மனிதரோட பெயர் ரஜினிகாந்த். அந்த படம் தான் பேட்ட . பேட்ட அனிருத் செய்த ஒரு சிறப்பு நிகழ்வு. படம் ஒரு 50% அப்படின்னா அனிருத் இசை 50%. அனிருத் ஓட ஆரம்ப நிலைல அவர் பண்ண 3, எதிர் நீச்சல் , வணக்கம் சென்னை இந்த படமெல்லாம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி குடுத்துச்சு. ஆனா அவர் இப்ப இருக்குற இடத்துக்கு ஸ்டார்டிங் பாயின்டா இருந்த படம் கத்தி. அனிருத் சினிமா வாழ்க்கைல ரொம்ப முக்கியமான படம் கத்தி. இப்ப வரைக்கும் கத்தி BGM-அ நிறைய பேர் ரிங்டோன்-ஆ வச்சிட்டு தான் இருக்கோம்.
தவிர்க்க முடியாத அனிருத் கூட்டணிகளும் இருக்கு. அதுல நிறைய பேருக்கு புடிச்ச கூட்டணி.
விஜய் – அனிருத்
தனுஷ்- அனிருத்
Sk – அனிருத்
விக்னேஷ் சிவன்- அனிருத்
சிவகார்த்திகேயன் Career-ல 45% படங்களுக்கு அனிருத் தான் இசையமைச்சுருக்காரு. அது மட்டும் இல்லமா நான் ஏன் மறுபடியும் இளையராஜா , ரஹ்மான்-க்கு அப்பறம் அப்படின்னு சொல்றேன்னா… இப்போ தமிழ் சினிமால இருக்க டாப் 4 ஸ்டார்ஸ் ஓட மியூசிக் பண்ண ஒரே தற்போதைய ஜென் இசை இயக்குனர் அனிருத் 🔥
அடுத்த வருடம் இந்திய சினிமாவுக்கும், அனிருத் ரசிகர்களுக்கும் தீபாவளியா இருக்க போது. எல்லா பெரிய ஹீரோஸ் படமும் வச்சிருக்காப்ல, தொடர்ந்து எங்கள இசை மழைல மிதக்க வைங்க அனிருத். உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂