ஏய் சுழலி அழகி-இந்த பாட்டுல சொல்லியிருக்கமாதிரி உண்மைலயே அழகு தேவதைங்க நம்ப அனுபமா பரமேஸ்வரன். காதல் மாதமான பெப்ரவரில பிறந்த இவுங்க காலேஜ் Life-ல Communicative English படிக்குறாங்க. But நடிப்பு மேல கொண்ட காதல்னால படிப்ப Discontinue பண்ணிட்டு Acting Field-க்கு வராங்க.
May 2015-ல Premam அப்படினு ஒரு தரமான காதல் படம் ரிலீஸ் ஆகுது. அதுல நிவின் பாலிக்கு ஜோடியா நம்ப அனுபமா ஹீரோயினா நடிக்குறாங்க. திரை உலகத்துல தன்னோட முதல் படம் சூப்பர் ஹிட் ஆகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். அதே மாதிரி அனுபமாவும் ஆச படுறாங்க. முதல் படம் நடிக்கிறாங்க. படம் Theatre-ல ரிலீஸ் ஆகுது. அவங்க ஆசப் பட்ட மாதிரியே Premam படமும் செம்ம ஹிட் ஆகுது.
அந்த படத்துக்கு அப்புறம் நிறைய படங்கள் ஹீரோயினா பண்ண Start பண்ணுறாங்க. October 2016-ல தமிழ்ல Entry கொடுக்குறாங்க. தமிழ் சினிமாவின் Bruce Lee ஆன தனுஷ் கூட Kodi படத்துல ஹீரோயினா நடிக்குறாங்க Already Premam படம் மூலமா பாதி தமிழ் பசங்க மனசுல இடம் பிடிச்சவங்க Kodi படம் ரிலீஸ் ஆன அப்புறம் ஒட்டுமொத்த தமிழ் பசங்க மனசையும் திருடிட்டாங்க. அடுத்தடுத்து நிறைய மலையாளம், தெலுங்குனு படம் பண்ணிட்டே இருக்காங்க.
2017-ல அதர்வாக்கு ஜோடியா Thalli Pogathey-னு ஒரு Different-ஆன படம் காதல் படம் பண்றாங்க. அந்த படமும் மக்கள்கிட்ட நல்ல Reach ஆகுது. தமிழ், தெலுங்கு, மலையாளம்னு கலக்கிட்டு இருந்தவங்க ஏன் கன்னட சினிமாவ மட்டும் விட்டு வைக்கணும்னு Feb 2019-ல கன்னடா Most Popular Actor ஆன Puneeth Rajkumar-க்கு ஜோடியா Natasaaravabhowa அப்டின்ற படத்துல நடிக்கிறாங்க, கன்னடால Entry குடுக்குறாங்க.
இப்போ 2024 Feb 16 நம்ப ஜெயம் ரவி, அனுபமா, கீர்த்தி சுரேஷ் சேர்ந்து நடிச்சிருக்க Siren படம் ரிலீஸ் ஆகியிருக்கு. இந்த படமும் மக்கள்ட்ட சிறப்பான வரவேற்ப பெற்றிருக்கு. இந்த Siren படம் அனுபமாவோட Birthday Special Movie-னு கூட சொல்லலாம். அவுங்க Birthday Treat-ஆ இந்த வருஷம் நமக்கு Siren படம் குடுத்திருக்காங்க.
இந்த வர்ஷம்ன்னு இல்ல இனிவரப்போற எல்லா வருஷமும் இவுங்க Birthday-க்கு படம் ரிலீஸ் பண்ணனும். சூப்பர் ஹிட் ஆகணும்னு சொல்லிக்கிட்டு சூர்யன் FM சார்பா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுபமா பரமேஸ்வரன்.