Cinema News Stories

ஏனென்றால் உன் பிறந்தநாள்!

மதன் கார்க்கி கவிப்பேரரசு வைரமுத்து அவர்களோட பையன். அவர் எழுதின எந்த பாட்டு உனக்கு ரொம்ப பிடிக்கும்னு கேட்டா அய்யய்யோ, எந்த பாட்டுன்னு சொல்லுவேன்.

தமிழ்ல பிறந்தநாள் வாழ்த்து சொன்னா நல்லா இருக்காது இங்கிலீஷ்ல சொல்லுவோம்ன்னு நினைக்கக்கூடிய இந்த சூழ்நிலைல, ஏனென்றால் உன் பிறந்தநாள்ன்னு ஒரு பாட்டு ஃபுல்லா தமிழ்ல பிறந்தநாள் வாழ்த்து சொல்ற மாதிரி எழுதி இருப்பாரு. அந்த பாட்ட சொல்லவா.., 15 நிமிஷத்துல பாண்டியநாடு படத்துல வரும் Fy fy fy பாட்ட எழுதி முடிச்சாரு… அந்த பாட்ட சொல்லவா?

நாய்கள் ஜாக்கிரதை படத்துல என் நெஞ்சில் ஏறினாயேன்னு நாய்க்காக எழுதின பாட்டுல நாய் நாயின்னு முடிகிற மாதிரி ஒரு பாட்டு எழுதி இருப்பாரே அந்த பாட்ட சொல்லவா, Palindrome வார்த்தை ஒரு பத்து எழுதுன்னு சொன்னா திக்குமுக்காடி போய் நிற்போமே, தாத்தா பாப்பா போன்ற Palindrome வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தி ஒரு பாட்டை எழுதி இருக்காரு அந்த பாட்ட சொல்லவா?

எந்திரன் படத்தில் வர பூம் பூம் பாட்டு எழுத ஒரு வருஷம் டைம் எடுத்துக்கிட்டாரே அந்த பாட்ட சொல்லவா… ஏழாம் அறிவு படத்துல சைனீஸ் பிளஸ் தமிழ் இந்த ரெண்டு மொழிகளை பயன்படுத்தி சைனீஸ் ரைஸ் என்ற பாட்டை எழுதி இருந்தாரே… அந்த பாட்ட சொல்லவா? ஸ்கூல் பசங்க ஜூப்பிட்டர்ல எத்தனை மூணு இருக்குன்னு கேட்டா மதன் கார்த்திக் பாட்ட கேட்டு பதில் எழுதினாங்களே அந்த செல்பி புள்ள பாட்ட சொல்றதா இல்ல இந்த செல்பி புள்ள பாட்ட கேட்டு தேனியில் நடக்க முடியாம, பேச முடியாம இருந்த ஒரு பையன் குணமாகினானே அத சொல்லவா?

துக்ளத் தர்பார் படத்துல காமி காமி என்ற பாட்டில் ஃபுல்லா கா வரிசையில் ஆரம்பிக்கிற மாதிரி பாட்டு எழுதி இருந்தாரே அந்த பாட்ட சொல்லவா, துப்பாக்கி படத்துல ஹாரிஸ் ஜெயராஜ் ஓட இசையில ஒரு பாட்டுக்கு 40 பல்லவி எழுதி கொடுத்தும் புடிக்கலன்னு சொன்னதுக்கு அப்புறம் கூகுள் கூகுள்ன்னு ஒரு வெற்றிப் பாட்டை கொடுத்தாரே அந்த பாட்ட சொல்லவா. 2.0 படத்துல மதன் கார்க்கி எழுதுன பாட்ட இருபது கோடி செலவு பண்ணி எடுத்து இந்த பாட்டுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லைனு சொல்லி படம் முடிஞ்சதுக்கு அப்புறம் போட்டாங்களே அந்த இந்திரலோகத்து சுந்தரி பாட்ட சொல்லவா, சங்கர் எடுத்த நண்பன் படத்துக்கு ஒரே டியூனுக்கு அஞ்சு வித வெரைட்டில பாட்டு எழுதிக்கொடுத்து, அந்த அஞ்சுமே வேணாம்னு சொன்னதுக்கு அப்புறமும் 16 லாங்குவேஜ்ல காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி அதுக்கு பாட்டு எழுதிக் கொடுத்தாரே அந்த பாட்ட சொல்லவா?

இல்ல பாட்ட தாண்டி ஐநூறு ஆண்டு கால பழமையான விஷயத்த படமா எடுத்த பாகுபலி படத்துக்கு வரிகள் எழுதி கொடுத்தது மட்டுமில்லாம அந்த படத்துல கிளிக்கின்ற ஒரு மொழியவே உருவாக்கி வைத்தது மட்டுமில்லாம அந்த கிளிக்கு மொழியில் ஒரு பாட்டே எழுதி இருக்காரே… அந்த பாட்ட சொல்லவா? இப்படி சொல்லிக்கிட்டே போவேன். ஏன்னா இன்னைக்கு மதன் கார்த்தி பிறந்தநாள் பிறந்தநாள். இன்னைக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். இது எல்லாம் மத்த யாராலயும் நினைத்துப் பார்க்க முடியாத மதன் கார்க்கியின் வரிகள்.

Article by RJ Joe

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.