கிரிக்கெட் அப்படின்றது இந்தியாவோட அன் அபீஸியல் தேசிய விளையாட்டு. இந்தியாவோட தெருக்கள்ல ஆரம்பிச்சு மக்கள் எல்லாருமே அதிகமா விளையாடுற விளையாட்டு கிரிக்கெட் தான். இப்படி கிரிக்கெட் மேல ஆர்வம் அதிகமா வர்றதுக்கு ஒரு சில கிரிக்கெட் பிளேயர்ஸ் தான் காரணம்.
இதுக்கு ஒரு பெரிய உதாரணம் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கருக்கு அப்பறம் தான் கிரிக்கெட் இந்தியாவுல ரொம்ப அதிகமா பிரபலம் ஆச்சு அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா அவருக்கு முன்னாடியே மக்களுக்கு கிரிக்கெட் மேல விருப்பம் வரதுக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் வீரர்கள் காரணமா இருந்தாங்க.
அதுல முக்கியமானவர் ரவி சாஸ்திரி. கிரிக்கெட்டபொறுத்த வரைக்கும் பெரிய விஷயம் என்னன்னா? ஒரு அணி உலக கோப்பையை கைப்பற்றனும் அப்படிங்கறது தான். அப்படி நம்ம இந்தியா 1983-ல உலக கோப்பைய வின் பண்ணப்போ அந்த அணியில் இருந்தார் ரவி சாஸ்திரி.
அந்தத் தொடர்ல சிறப்பான தன்னோட பங்களிப்பை கொடுத்து இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தார். அதுக்கப்புறம் 1985-ல நடந்த உலக சாம்பியன் ஷிப் கிரிக்கெட்ல இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான வீழ்த்தி சாம்பியன் ஆனுச்சு. அந்த அணியில் இருந்தார் ரவி சாஸ்திரி.
அதுக்கப்புறம் இந்திய அணியோட கேப்டனா பதவி ஏற்று இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை குவித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரராய் இருந்த இவரு, இவருடைய ஓய்வுக்கு அப்புறம் இந்திய அணி ஓட தலைமை பயிற்சியாளர் ஆனார், இவருடைய தலைமையில இந்தியா எண்ணில் அடங்கா வெற்றிகளை பெற்றாங்க.
இது எல்லாத்தையும் தாண்டி கிரிக்கெட்ல இவர் ஒரு சிறந்த வர்ணனையாளர், இவருடைய வர்ணணையை கேட்பதற்காகவே பலபேர் கிரிக்கெட் பார்ப்பாங்க. அவ்வளவு ஏன் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி சிக்ஸ் அடிச்சு இந்தியாக்கு உலக கோப்பையை வாங்கி கொடுப்பார்.
அந்த சிக்ஸ் எந்த அளவுக்கு எல்லாருக்கும் ஞாபகம் இருக்கோ அதே அளவுக்கு இவருடைய அந்த வர்ணனையும் எல்லாருக்கும் கடைசி வரைக்கும் நியாபகம் இருக்கும். “Dhoni finishes off in style, India lift the world cup after 28 years” இவருடைய இந்த குரல் இந்திய மண்ணில் கிரிக்கெட் அப்படின்ற விளையாட்டு மறையுற வரைக்கும் ஒலிச்சுக்கிட்டே இருக்கும்.