நம்மள குழிக்குள்ள தள்ளுற அதே வாழக்கை தான், அதுல இருந்து வெளிய வர கால்களுக்கு பலமும் கொடுக்கும்.
அப்படி ராஜ்கோட்-ல ராஜ பரம்பரையா இருந்த நம்ம ரவீந்திர ஜடேஜா குடும்பத்தோட சொத்துக்களை அரசாங்கம் அபகரிக்க, ஒரு சாதாரண நடுத்தர குடும்பமா மாறுறாங்க. குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், தந்தை-னு ரெண்டு பேருமே வேலைக்கு போக, கடைசி பையனான ஜடேஜா தன்னோட அம்மாவை மிஸ் பண்ணதால… இரவு நேரங்கள்ல அவருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி வருது.
அதிர்ந்து போன தாய் , தந்தையருக்கு டாக்டர் ஆலோசனை வழங்குறாரு… அவர விளையாட விடுங்க, அப்போதான் Deep Sleep கிடைக்கும்னு சொல்றாரு. இவரும் கிரிக்கெட் விளையாட போறாரு… போன இடத்துல அவரை விட 10 வயசு பெரிய பசங்க எல்லாம் விளையாட, வெறும் Fielding மட்டும் பண்ண விடுறாங்க. விரக்தியின் உச்சத்துக்கு போன ஜடேஜா நான் இனிமே விளையாட போகமாட்டேனு சொல்லிடுறாரு.
இந்த சமயத்துல அதே ஊருல Retired ஆன ஒரு காவல் அதிகாரி இலவசமா Coaching சொல்லித்தர அவரு கிட்ட பயிற்சிக்கு அனுப்புறாங்க. அவரோட விளையாட்டு ஆர்வத்த அதிகமாக்கலாம்னு பாத்தா, அங்கேயும் Fielding தான் பிரதானமா இருக்கு. பயிற்சியின் அணுகுமுறை வித்தியாசமா இருக்கு, Coach-ம் ரொம்ப கடினமா நடந்துக்க… நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுனு ஒரு மனநிலை ஜடேஜாவுக்கும் வருது.
Coach-க்கும் அவரோட அடிக்கும் பயந்தே எல்லாமே கத்துகிட்ட ஜடேஜா இன்னிக்கு அதே பீல்ட்டிங் Technique மூலமா உலகின் தலைச்சிறந்த Fielder-அ இருக்காரு. அவருக்கு பயந்து Stump To Stump Bowling போட்டு ரன் கொடுத்தா பிரச்சனை ஆகிடும்-னு நினைச்சவரு, இப்போ அதே Technique-அ பயன்படுத்தி தான் பல விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்காரு.
நாம நினைச்சா பாதாள குழியும் படிக்கெட்டுகளா மாறும் அப்டிங்குறதுக்கு ரவீந்திர ஜடேஜா ஒரு எடுத்துக்காட்டு. Suryan FM சார்பாக Happy Birthday.