ரியோ இந்த ரெண்டு எழுத்து பெயர் கடந்த பாதைய சாதாரணமா திரும்பி பார்த்திட முடியாது, அதுக்குள்ள பெரிய பெரிய கனவு, காதல், வெற்றி, தோல்வினு எல்லாம் கலந்திருக்கு.
மஞ்சள் மாநகர் ஈரோட்ல பிறந்த நம்ம ரியோ, வீட்ல இருந்து தலைநகர நோக்கி வந்தப்போ , திரும்ப வீட்டுக்கு போகணும்னு நெனச்சாருனு தெரியல , தன்னோட திறமையால அவரோட வீடு மட்டுமில்லாம தமிழ்நாட்டோட ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் தொலைக்காட்சி மூலமா நுழைச்சிட்டாரு.
2011ல “கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை” பேர கேட்டாலே அந்த காலம் அது அது அது அது வசந்தமான காலம்னு நியாபகம் வருதுல,அதுல “பழனி”யா நம்ம வந்த ரியோவ யாராலையும் மறக்க முடியாது, வருஷம் ஓடினாலும், ரியோக்கு வயசு மட்டும் ஓடல இப்பவும் பழனிய போல அதே இளமை திரும்புதே லுக்ல தான் இருக்காரு.
கானா காணும் காலங்கள் ரியோவோட வரும் காலங்கள வசந்தமாக்குமானு அன்னைக்கு நெனைச்சிருபாரனு தெரியல, ஆனா ரியோ கலைத்தாயின் Son தான்னு , Sun Musicல அவர் பண்ணிண நிகழ்ச்சிகள் அதையும் நிஜமாக்குச்சு.
“VJ RIO” இப்பலாம் ஏதாச்சும் ஒரு பாட்டு trend ஆச்சுனா , Social Mediaல எந்த பாக்கம் போனாலும் அந்த பாட்டுதான் நம்ம டைம்லைன்ல வரும், அதுமாரி சன் மியூசிக்ல ரியோ shows பண்ணின அப்போ, எப்ப சன் மியூசிக் போட்டாலும் ரியோ வர மாதிரி தான் இருக்கும், ஏன்னா சுடசுட சென்னை, கல்லூரிக்காலம், காபி டீ ஏரியா, பிரீ ஆஹ் விடு இப்படி பல shows ரியோவோட ரீச்கு முக்கியமா அமைஞ்சது.
திரும்ப திரும்ப சன் மியூசிக்ல வந்த ரியோ முகத்தையும் அவர் குறம்பா பேசுறதையும், மக்கள் விரும்ப ஆரம்பிச்சு, 10 வருஷத்துக்கு முன்னாடியே KGF ROCKY BHAI, BAHUBALLI மாதிரி ரியோக்குனு மிகப்பெரிய ரசிகர் பட்டாலத்த இல்ல ரசிகர் சாம்ராஜ்யத்த ஒருவாக்கியிருந்தாரு, அதுலையும் அன்னைய தேதிலருந்து இப்ப வரை ரியோக்கு இருக்க Girl Fans எல்லாம் கணக்கெடுத்தா தமிழ்நாட்டுல இருக்க மொத்த Women’s college admission விட அதிகமா இருக்கும்.
சன் மியூசிக் shows மூலமா இளைஞர்கள் எல்லாரையும் ரசிகர்களா மாத்தின ரியோ, சரவணன் மீனாட்சி சீசன் 3 மூலமா ஒரு வீட்ல இருக்க Ration cardல உள்ள Relations எல்லாரோடவும் Relationship Develop பண்ணிட்டாரு.
சீரியல் ஹீரோ ஆனாலும், நம்ம ரியோ தன்னோட முதல் காதலி மைக் ,மேடை, கலாய்னு VJ கூட காதலா தொடர்ந்திட்டு தான் இருந்தாரு, பல ரியாலிட்டிஷோஸ்ல, பல விருது மேடைகள்ல Anchorரா ஒரு பக்கம், அடுத்து 100நாள் தன்னோட வீட்ல இருந்து பிரிஞ்சு , 100 கேமராக்கள் இருக்க ஒரு வீட்ல National Televisionல பிரம்மாண்டமான ஷோலையும் கலந்துகிட்டாரு.
அடுத்து பெரிய ஒரு அவதாரம் நம்ம ஈரோட்டு ஹீரோவ மாறினாரு, 2019ல “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” நல்ல ஒரு விமர்சனத்தோட பலருக்கும் பிடிச்ச படமா அமைஞ்சது,பல வெற்றிய பாத்த ரியோக்கு, முதல் படம் திரைல நாயகனா வெற்றி, 2021″ பிளான் பண்ணி பண்ணும்” ஒரு வித்தியாசமான கதைகளத்தோட ரியோ, ரம்யா நம்பீசன், தங்கதுரை எல்லாரோடவும் ஜாலியா போகும் இந்த படம்,
சமீபத்துல வந்த “ஜோ” ரியோவோட கலை பயணத்துக்கு ஒரு விருதுனு சொல்லனும்,
சிறந்த காதல் படங்கள்னு நமக்கு நிறைய லிஸ்ட் இருக்கும், அதுல “ஜோ”க்கு ஒரு தனி இடம் தரனும். தமிழ்படமா ரிலீஸ் ஆகி இன்னைக்கு PAN INDIA படம்னு சொல்ற அளவு நம்ம பசங்க மீம்ஸ் எல்லாம் போட்டு, லவ் எடிட்ஸ் எல்லாம் பண்ணி, ஒரு நல்ல படத்த எல்லாருக்கும் கொண்டுபோய் blockbuster படமா மாத்திட்டாங்க.
சில நடிகர்களுக்கு முதல் படத்தோட பெயரே அடைமொழியா மாறும், அது மாதிரி இப்ப ரியோவ எல்லாரும் ஜோ ரியோனு எல்லாரும் கொண்டாடுறாங்க.
ரியோவோட வெற்றி மூணு காரணங்கள் ரசிகர்கள் பார்வைல சொல்லனும்னா ,
ரியோ = ரியாலிட்டி, நம்மல திரைல பாக்குறது மாரியும், நம்ம கூட இருக்க ஒருத்தர் மேடைல பேசுற மாதிரியே இருக்கும்.
ரியோ – ஸ்ருதி, நீ எதுனாலும் பண்ணு உன்னோட நான் இருக்கேன்னு காதல் மனைவியோட துணையா வாழ்க்கை அடுத்த அடுத்த கட்டத்துக்கு போறாரு, ஏன்னா எல்லார் வாழ்க்கைலையும் இப்படி ஒரு அவசியம்.
ரியோ – நண்பர்கள், நம்மல ஒருத்தன் மேல வாரன்னு சந்தோஷப்படுற நண்பர்கள் மட்டுமில்ல நீயும் வா, நாங்களும் வரோம்னு அவரோட திரைத்துறை பயணம் பண்றவங்க.
இது மாதிரி அன்பான கேங் யாரோட வாழ்க்கைல இருக்கோ அவங்களுக்கெல்லாம், ரியோ போல வெற்றி காத்திட்டு இருக்கு, ரியோ இப்படி பலருக்கும் Inspirationவும் இருக்காரு.
ரியோ இன்னும் பல உயரம் தொட சூரியன் FM ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.