Rhyming-க்கும் சரி Timing-க்கும் சரி இவர மிஞ்ச ஆளே இல்ல. மேடை பேச்சுலயும் சரி நடிக்கிறதுலயும் சரி எப்போவுமே மாஸ் தான். இதுவரைக்கும் 13 படம் நடிச்சிருக்காரு.
முக்கியமா மாரி படத்துல அவரோட Character நல்லா தெரிஞ்சுது. தனியார் தொலைக்காட்சில Stand Up Comedian-அ Mimicry Artist-அ ஆரம்பிச்ச வாழ்க்க இப்போ படிப்படியா உயர்ந்து இங்க இருக்காரு. அவர்கிட்ட இருந்த பல தப்பான பழக்கங்கள மாத்திட்டு பலருக்கும் Inspiration-அ இருக்காரு.
அவர சுத்தி எவ்வளவோ கிண்டல் கேலி இருந்தும் Negative-அ பேசியும்… நான் வீழ்வேனென்று நினைத்தாயோனு அவரோட இடத்தில திரும்ப வந்து நிக்குறாரு. அவரை சுத்தி பல Controversies இருந்தாலும் அத Handle பண்ற இடத்துல அவர் தவறுனதே இல்ல.
ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு Screen Space-ஐயும் Proper-அ Use பண்ணதால மட்டுமே அவரால இந்த இடத்த அடைய முடிஞ்சுது. இவரு Host-ஆவும் இருப்பாரு. Judge-ஆவும் இருப்பாரு. தீய பழக்கங்களுக்கு அவர் அடிமையானதும், அதுல இருந்து எப்டி வெளிய வந்தாரு அப்படிங்குற Journey-ம் பலர் வாழ்க்கைய மாத்திட்டு வருது.அவர் மேல தவறே இருந்தாலும் அத சரி பண்ணி மன்னிப்பு கேக்கற ஒரு மனிதர் இவரு.
College School-ல எல்லாம் இவரு வாங்காத பட்டமே இல்லயாம். 10th படிக்கிறதுல இருந்து Weight Lift பண்றதுல ஆர்வம் இருந்துருக்காம்.பெரிய Body Builder ஆகணும்னு ஆசப்பட்டவராம்.பொருளாதார அடிப்படைல அவரால சமாளிக்க முடியாததால Track மாத்திட்டாரு. என்ன தான் Track மாத்துனாலும் அவரோட Interest-அ எந்த வயசுலயும் Explore பண்றவரு தான் இவரு. More Strength & Kudos To You தலைவா!