’ரோகித் சர்மா’ இப்போதைக்கு இந்திய கிரிக்கெட்ட தூண் மாதிரி தாங்கி பிடித்து இருக்கிறது இவர்தான். 2007, T20 உலகக் கோப்பை போட்டியில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கால காலடி வச்சாங்க.
இந்த டீம் வின் பண்றது ரொம்ப கஷ்டம் அப்படினு எல்லாருமே நெனச்சிட்டு இருந்தப்போ…. ஓடாம ரன் எடுத்தோம் சும்மா ஒக்காந்து வின் எடுத்தோம் அப்படின்னு தோனி தலைமையிலான இந்திய அணி T20 உலக கோப்பையை முதல்முறையா வின் பண்ணாங்க.
அந்த அணியில் மன்னிக்கவும் அந்தப் போர்ல ரோகித் சர்மா என்ற வீரரும் இருந்தாரு. அந்தத் டோர்னமென்ட்ல சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரா ரோகித் சர்மா பண்ணுன ஒரு ரன் அவுட் மொத்த மேட்ச்சயும் மாத்தி இந்திய அணி வின் பண்ண உதவியா இருந்துச்சு.
இங்க ஆரம்பிச்ச இவருடைய இந்த வெற்றிப் பயணம் சிறிய இடைவேளைக்கு அப்புறம் மீண்டும் 2013-ல ஆரம்பிச்சுது. சச்சின், சேவாக், கங்குலி போன்ற மிகப்பெரிய அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பதிலா ஓப்பனிங் பேட்ஸ்மேனா உள்ள போன இவரு அவங்களுடைய இடத்த முழுவதுமா பூர்த்தி பண்ணிட்டாரு.
ஒருமுறை சச்சினே சொன்னார் என்னுடைய சாதனையை பூர்த்தி பண்ண ரெண்டு பேரால முடியும். ஒருத்தர் விராட் கோலி இன்னொருத்தர் ரோஹித் சர்மா. அவர் சொன்னதுக்கு ஏத்த மாதிரியே சச்சினுடைய 200 ரன் சாதனையை முறியடிச்சாரு ரோகித் சர்மா. அது ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல மூணு வாட்டி.
அது கூடவே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் அடிச்சவரும் இவர்தான். கிரிக்கெட்ட பொருத்தவரைக்கும் செட் பேட்ஸ்மேன்-அ அவுட் எடுக்குறது கொஞ்சம் கஷ்டம். அதுவே அந்த செட் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவா இருந்தா பவுலர்கள் பாவம்தான்.
இந்தியாவு நடந்துட்டு இருக்க 20 ஓவர் டி20 டோர்னமெண்ட்ல மும்பை அணிக்காக 5 கப்புகளை வாங்கி கொடுத்திருக்கிறார் ரோகித் சர்மா. இங்கயும் அவருடைய ஆதிக்கம் தான். மும்பை ரசிகர்கள் எப்பவுமே இவர மும்பையோட ராஜான்னு தான் சொல்லுவாங்க.
இப்படி ஒட்டு மொத்தமா இந்திய கிரிக்கெட்டோட அடையாளமா இருக்க ரோகித் சர்மா இந்த முறை T20 உலகக்கோப்பை போட்டியில இந்திய அணியோட கேப்டனா களம் இறங்குறாரு கண்டிப்பா கப்பியும் வின் பண்ணுவாரு. ஹாப்பி பர்த்டே ஹிட் மேன்.