சில பேரோட கதைகளை கேட்கும் போது “ப்பஆ” இப்படி ஒரு கடின உழைப்பா-னு நம்ம மனசுல ஒரு மெய்சிலிர்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட மெய்சிலிர்ப்புக்கு சொந்தக்காரர் தான் இப்போ சமீபத்துல “நடிப்பு அரக்கன்”-னு அழைக்கப்படுற S J சூர்யா அவர்கள்.
இப்போ உள்ள generation-க்கு இவர் ஒரு நல்ல நடிகர்-னு தெரியும், ஆனா இவரு 90’ஸ்-ல ஒரு கைத்தேர்ந்த இயக்குனர்-னு அந்த நேரத்துல வாலி மற்றும் குஷி படத்தை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு தான் தெரியும். தமிழ் சினிமா-வோட மாபெரும் நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்-ஓட ஒரு முக்கிய படமா இந்த திரைப்படங்கள் அமைந்தது.
ஆனா இப்போ இவருக்கு கிடைத்த பாராட்டும், புகழும் ஆரம்பத்துல கிடைத்ததா-னு கேட்டா கண்டிப்பா இல்லங்க. தன்னோட முதல் படமான வாலி கதையை அஜித் கிட்ட சொல்ல வரும்போது அறுந்து போன செருப்பை ஊசி குத்தி வந்த ஒரு மனுஷன், பஸ்-க்கு கூட சில்லறை இல்லாம lift கேட்ட வந்த ஒரு அறிமுகமும் அடையாளமும் இல்லாத இயக்குனர முதல்ல ஆதரித்தது நடிகர் அஜித் அவர்கள் தான்.
வாலி படத்தை ரிலீஸ்-க்கு முதல் நாளிலேயே premiere show-ல பல பேரு நேர்மறையான விமர்சனங்களை வைத்து இந்த படத்தை release-ஏ பண்ண வேண்டாம்-னு சொல்லுற அளவுக்கு போன நேரத்துல தன் மீது வைத்த நம்பிக்கையை இழக்காம இருந்த S J சூர்யா அந்த படத்தோட வெற்றிக்கு பிறகு, குஷி படத்தோட வெற்றினு மிகப்பெரிய இயக்குநர் ஆனாரு.
இதை அடுத்து எடுத்த சில படங்கள் கதையின் அம்சங்கள்-ல பாராட்டை பெற்று இருந்தாலும், வியாபார ரீதியா சரியான போக்குல போகாம இருந்தது. அவ்ளோதானா S J சூர்யா-னு நினைத்த நேரத்துல தன்னோட இன்னொரு முகமான நடிப்புத் திறனை வெளிக்காட்டி தனக்குனு ஒரு ரசிகர் பட்டாளமே வைத்து இருக்காரு-னா, அது ரோஜாக்களை கடந்த பாதை இல்லங்க, முட்களை கடந்த பாதை.
மெர்சல் படத்துல மெர்சலாக்கி, மாநாடு மூலமா ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி, மார்க் ஆன்டனி-ல தனக்குனு ஒரு மார்க்-அ குத்தி, வில்லன்-னா அது S J சூர்யா தான்-பா வேற option-ஏ வேணாம்-னு தன்னோட அரக்க நடிப்பால கிரங்கடித்த நடிப்பு அரக்கனுக்கு சூர்யன் FM-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.