கரஞ்சித் கவுர் அப்டினா யாருனு தெரியுமா? ஆனா நமக்கெல்லாம் இவங்கள சன்னி லியோன் அப்டின்னு சொன்னா தான் தெரியும். அடல்ட் இண்டஸ்ட்ரி மூலமா பிரபலாமான இவங்க, இந்த அடல்ட் இண்டஸ்ட்ரில இருந்து விலகுனத்துக்கு அப்புறமும் அவங்கள போர்ன் ஆக்ட்ரேஸ்ங்கிற கண்ணோட்டத்துல தான் எல்லாரும் பாத்தாங்க.
அது ஒரு விதத்தில உறுத்துனாலும் அத எல்லாம் பத்தி கவலை படாம அவங்க வளர்ச்சியை பத்தி மட்டுமே யோசிச்சாங்க. அதுல மட்டுமே அக்கறை செலுத்துனாங்க. பல சர்ச்சைகள் இவங்களுக்கு எதிரா வந்துச்சு , ஆனா அதெல்லாம் நிலைச்சு நிக்கல.
மக்களுக்காக இவங்க செஞ்ச உதவிகள் நிறைய. இவங்களால பயணடைஞ்சவங்க பல பேர் இங்க இருக்காங்க. கேன்சர் பாதிக்கப்பட்டவங்களுக்காக இவங்க உதவி பண்ணதா இருக்கட்டும் ,விலங்குகள் மேல இவங்க அக்கறையா இருக்கிறதுன்னு நிறைய நல்ல விஷயங்கள் இவங்கள பத்தி சொல்லிக்கிடே போலாம்.
பல உதவிகள் செஞ்சத தாண்டி, பல சர்ச்சைகள தாண்டி, பல போராட்டங்கள தாண்டி இன்னைக்கு அவங்க மேல இருந்த கண்ணோட்டத்த மாத்தி காட்டிருக்காங்க. இப்போ சன்னி லியோன் அப்டினு சொன்னா இந்திய நடிகை அப்டினு தான் உலகம் முழுக்க தெரியுது.
யாரோ ஒரு சில பேர் கொண்டவர்கள் முன் வைக்கிற கருத்தால அடுத்தவங்க வாழ்க்கை எப்படி மாறும்னு யாருக்குமே தெரியாது. இன்னைக்கு நம்ம நம்மளோட சமூக வலைத்தளங்கள்ல சொல்ற ஒரு ஒரு வார்த்தையும் ஒருத்தரோட வாழ்க்கையவே மாத்தக் கூடிய அளவு வலிமையானதா இருக்கு. அதனால எல்லாரும் சமூக பொறுப்போட செயல்படுவோம்.