பொதுவாவே நாம ஆல்ரவுண்டர்-ன்ற ஒரு வார்த்தைய cricket ல பயன்படுத்துவோம். ஆனா அதே வார்த்தைய சினிமால பயன்படுத்தினா அது அவருக்கு தான் perfect ah செட் ஆகும். பாடகரா, நடிகரா, இயக்குனரா, நடனக்கலைஞரா, எழுத்தாளரா, தயாரிப்பாளரா இருக்குறவரு தான் இவரு.
அடுக்கு மொழி வசனம் பேசறதுல expert இவரு, தங்கச்சி செண்டிமெண்ட்-ல புலியும் இவரு, வேற யாரு நம்ம “T ராஜேந்திரன்” சாரு. அவர் சினிமாக்கு கொடுத்தது ரெண்டு சொத்துக்கள், அவங்க ரெண்டுபேருமே இந்த துறைல முத்துக்கள், ஒரு தலை ராகத்துக்கு கதை எழுதுனாரு, வசந்த அழைப்புகள்ல தன்னோட all round performance ah கொடுத்தாரு, “தங்கைக்கோர் கீதம்”ல தன்னோட கால் தடம் பதிச்சாரு, அடுத்தடுத்து hitum கொடுத்தாரு,
தன்னோட ரத்தம், எப்போதுமே எழுப்பும் சத்தம்னு 1984 ல “உறவைக்காத்த கிளி” படத்துல லிட்டில் சூப்பர் ஸ்டார் ah கண்ல காட்டுனாரு, அடுத்தடுத்து படத்துல நடிக்கவும் வச்சாரு. மகனையும் அடுக்குமொழி வசனத்துல பின்னிப்பெடலெடுக்க வச்சாரு, 2001 ல குறளரசன “சொன்னால் தான் காதலா” படத்துல நடிக்க வச்சாரு அதுல அவரு தமிழ்நாடு state awardum வாங்கினாரு. 2002 ல சிலம்பரசன “காதல் அழிவதில்லை” படத்துல ஹீரோவா ஆக்குனாரு.
தன்னை போல சினிமாவ நேசிக்கும் ஆட்களா இருவரையும் உருவாக்குனாரு, இவர் வசனத்துக்கு நாம கை தட்டுவோம், இவர on screenல பாத்தா விசில் பறக்க விடுவோம், இவரு செண்டிமெண்ட் subject ah இட்லிக்கு தொட்டுக்க சட்னி மாறி சாப்பிட்டாலும், அவருக்கு காமெடி subject காராசேவ் சாப்பிடற மாதிரினு தான் சொல்லணும். தொட்டது துலங்கும் படத்துல நடிச்சா பட்டாசு தெறிக்கும்.
மொத்தத்துல நம்ம TR அவர்கள் தமிழ் சினிமால எத்தனை generation வந்தாலும் கிடைக்காத பொக்கிஷம், நாம இவர மாதிரி அடுக்குமொழி வசனம் பேசலாம். ஆனா ஒரே சந்திரன், ஒரே சூரியன், ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே உலகநாயகன் மாறி ஒரே TR தான். நம்ம TR அவர்கள் தமிழ் சினிமா துறைல நிறைய பண்ணிருக்காரு, தமிழ் சினிமா துறைல தனக்கே உரிய ஒரு இடத்துல கொடிகட்டி பறந்துட்டுருக்குற haters இல்லாத நம்ம TR அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.