தென்மேற்கு பருவக்காற்று வீசும் போது பீட்சா டெலிவரி பண்ண வந்த இவருக்கு நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போய் சூது கவ்விருச்சு.
இருந்தாலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-ன்னு மத்தவங்க நினைக்கும் போது இல்ல எனக்கான பாதையை எப்படி வேணாலும் என்னால மாற்ற முடியும்னு ரம்மி மாதிரி கலைச்சு போட்டு ஒன்னு சேத்தி பண்ணையாருடைய பத்மினி காருல ஏறி ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்டுகிட்டு எல்லாரு முன்னாடியும் நானும் ரவுடிதான்னு வலம் வந்தாரு.
இருந்தாலும் தனக்குள்ள இருக்குற சேதுபதிக்கு காதலும் கடந்து போனதால இறைவியைத் தேடி தர்மதுரையா கிளம்பினாரு. அப்புறம் ஆண்டவனோட கட்டளையால றெக்க வந்து மக்களோடு அன்பு சூழ வேற லெவல்ல வேதாவா அவதரித்தாரு. அவர் வேறு யாரும் இல்லை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமாக்குள்ள வர கஷ்டப்பட்டுட்டு இருந்த பல பேருக்கு மத்தியில இவரும் ஒருத்தர். தனக்கான வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் கடுமையான முயற்சி பண்ண இவர இப்ப எல்லாரும் மக்கள் செல்வனாக கொண்டாடிட்டு இருக்காங்க.
எளிமை தான் இவருடைய அடையாளம். திரையிலும் சரி தரையிலும் சரி. வாழ்க்கையில நாமளும் ஒரு நாள் கண்டிப்பா சாதிப்போம் அப்படின்னு துடிக்கிற பல பேரோட உள்ளங்கள்ல இருக்க உத்வேகம் இவர். Happy Birthday Vijay Sethupathi.