பாடல்களையும் தாண்டி சில பாடகர்கள் தலைமுறைகள் கடந்தாலும் நம்ம மனசுல நீங்காம நிலைச்சி இருப்பாங்க… அந்த வகைல இந்திய சினிமால தவிர்க்க முடியாத தலை சிறந்த பாடகர்ல இவரோட பேரு என்னைக்கும் இருக்கும்…
80,000 பாடல்களுக்கு மேல பாடி இருக்க ஒரு மாபெரும் கலைஞன்.. மலையாளம் தாண்டி தமிழ், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, இங்கிலிஷ், லத்தின் அப்டினு பல மொழிகள்ல பாடி இருக்காரு.. அதுவும் ஒரே நாள்ல 11 பாடல்கள் 11 வித்தியாசமான மொழிகள்ல பாடி சாதனை செஞ்சிருக்காரு K.J. Yesudas னு நம்ம எல்லாராலயும் அறியப்படுற கட்டச்சேரி ஜோசப் யேசுதாஸ்..
“யேசுதாஸ் அவர்களின் குரல் உலகில் எனக்கு மிகவும் பிடித்த குரல்களில் ஒன்று”அப்டினு இசைப்புயல் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு… 8 தேசிய விருதுகள், 8 பத்ம விருதுகள் அப்டினு விருதுகள் இவரால பெருமை அடைஞ்சுது. இவர் பாடிய ’அம்மா என்றெழைக்காத’ பாட்ட இன்னைக்கு கேட்டாலும் கல் மனமும் கரையும்.
மூன்றாம் பிறைல கண்ணே கலைமானே பாடல் இன்னைக்கும் நம் கண்கள கலங்கடிக்கும். இவரோட உருகவைக்கும் குரல் நம்மள பல நாள் உறங்க வெச்சிருக்கும். தமிழ், மலையாளத்துல நடிகரா 60’s ல தொடங்கி 2000 வரைக்கும் பல படங்கள்ல நடிச்சிருக்காரு.
இசையமைப்பாளரா 6 படங்களுக்கு இசை அமைச்சிருக்காரு. தன்னடக்கத்தின் சிகரம் அப்டினு இவர சொல்லலாம். நம்மளோட எல்லா சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி பாடல்கள ரொம்பவே ஆத்மார்த்தமா பாடியிருக்க பெருமை இவர சேரும். ஊர தெரிஞ்சிகிட்டேன், வாழ்வே மாயம், ஏதோ நினைவுகள், தெய்வம் தந்த வீடு அப்டினு காலத்தால் அழியாத காவிய பாடல்கள நம்ம காதுகளுக்கு விருந்து படைத்திடும்.
காண கந்தர்வன் K. J. யேசுதாஸ் அவர்களை பற்றி பேசுவதில் பெருமை கொள்கிறது சூரியன் FM.