Specials Stories

Hoi Selfie… Happy Birthday!

Sivakarthikeyan

Hardwork never fails-ன்னு இவர் உழைப்பைத் தேர்ந்தெடுத்தாரு, அவர வெற்றி தேர்ந்தெடுத்துது. மக்களுக்கு நகைச்சுவைய தந்தாரு, மக்கள் மனசல இடம் தந்தாங்க.

சினிமா பின்புலம் இல்லாம, வாழ்க்கைய ஆரம்பிச்சு, வெற்றிப்படங்களோட ஹீரோவா, பல பரிட்சைகள், புறக்கணிப்புகள், கிண்டல்கள் தாண்டி எதிர்நீச்சல் போடுகிறார், வெற்றி நாயகன் கலைமாமணி சிவகார்த்திகேயன்.

காவல் துறையில் பணியாற்றிய தந்தையின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்ந்தவர், தந்தையின் மரணத்திற்கு பிறகு அக்காவோட படிப்புக்கு தாய்மாமா உதவ, part-time job-ல் கிடைத்த பணத்தைக் கொண்டு குடும்பத்தையும் கவனிக்க தொடங்கினார். அக்கா டாக்டர் ஆனார். கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் மிமிக்கிரியில் தொடங்கியது இவர் கலைப்பயணம், தந்தையைப் போல காவல்துறையில் சேர வேண்டும் நினைத்தவர் நண்பர்களின் ஊக்கத்தினால், திரைத்துறையை இலக்கு என கொண்டார்.

சிங்கார சென்னை சிவகார்த்திகேயனுக்கு பல புரிதல்களை தந்தது. தன் சுவாரஸ்யமான பேச்சாலும், நகைச்சுவை வீச்சாலும் ஒரு Reality show-வின் Title Winner ஆனார். முதல் அங்கீகாரம், மக்களின் மனதில் பதிந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரை மாற்றியது. அப்போதே தன் மாமா மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் பாண்டிராஜின் மெரினா திரைப்படம் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்தைத் தந்தது. மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு நடிகர் தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் திரைப்படம் ஒரு மெகா ஹிட் கொடுத்தது. அனிருத் இசையில் “எதிர்நீச்சலடி” என்ற கவிஞர் வாலி வரிகளோடு எதிர்நீச்சலிட்டு, காமெடி தான் தன்னோட பலம்ன்னு புரிஞ்சிக்கிட்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் வெற்றி நாயகன் வரிசையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். Action படங்களிலும் நகைச்சுவை சேர்த்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தார்.

பொதுவாக பெண் வேடமிட்டு ஹீரோ நடிப்பது சவாலானது. அவ்வை சண்முகி திரைப்படத்தில் உலகநாயகன் முயற்சித்தது போல, தனது 10 வது திரைப்பத்திலேயே Remo Sister என்ற சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். காமெடி, நடிப்பு, நடனம், சண்டை என பல விஷயங்களில் கைதேர்ந்தவராக முன்னேறிய சிவகார்த்திகேயனுக்கு, பாசம் காட்டியும் நடிக்க தெரியும் என எடுத்துக்காட்டிய படம் நம்ம வீட்டு பிள்ளை. இது இன்னொரு பாசமலர்னு பலர் பாராட்டினாங்க.

காமெடி வசனங்கள் தான் இவரோட plus-ன்னா, அப்படி எதுவும் இல்லாம நடிச்சு வெற்றி வாகை சூடின படம் Doctor. இதுல முகபாவனைகள் இல்லாம நடித்தும் மக்களைக் கவர்ந்தார். நடிகரா, தயாரிப்பாளரா, பாடகரா கலக்குற சிவகார்த்திகேயன், சமீப காலங்களா பாடலாசிரியராவும் மாறி இருக்காரு.

அவரோட படங்களுக்கு மட்டுமில்லாம, முன்னணி ஹீரோக்களுக்கும் பாடல்கள் எழுதுறாரு. சில நாட்களுக்கு முன்னாடி இவர் வரிகளில் உருவான அரபிக் குத்து பாடல் வெளியாகி, இளைஞர்கள் மனசுல ஒரு பெரிய இடத்த பிடிச்சிருக்கு. கலகலப்புன்னா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன்னா கலகலப்பு.

தன்னோட நகைச்சுவை வார்த்தைகள் மூலமா ரசிகர்கள் மனசுல நம்பிக்கை விதைகளை தூவுற சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறது சூரியன் எப் எம்.

Article By RJ Bavya

About the author

MaNo