இந்த தலைப்ப பார்த்ததும் உங்களுக்கே ஆசை வந்துருச்சா? அப்படினா ஈஸியா சந்தானம் ஆகிரலாம். அதுக்கு இந்த மாதிரி சின்னதா work out பண்ணனும். எப்படினு கேட்குறீங்களா? சந்தானம் அப்டினாலே பெஸ்ட் counters தான். முதல்ல அத உருவாக்கணும் “பன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா” இது அவரோட பன்ச். இதுல ‘ப’ க்கு ‘ப’ இந்த மாதிரி எதுகை மோனையா dialogue உருவாக்கணும்.
“காதல் வந்துட்டா காந்திமதி கூட கரீனா கபூர் மாதிரி தான் தெரிவாங்க“. ‘கா’ க்கு ‘கா’ இந்த மாதிரி தான் நிறைய படங்கள்ல பேசிருக்காரு. அடுத்து வர்ற பஞ்ச் எல்லாத்தையும் கொஞ்சம் பாருங்க.
- டேய் எனக்கு மர்டர் பண்றது எல்லாம் பவுடர் அடிக்கிற மாதிரி
- கேக்குறவன் கேனயன்னா கேரம் போடு கண்டுபுடிச்சவன் K.S ரவிக்குமார்னு சொல்விங்க போல
- டேய் ரொம்ப ஆடாதடா இராணுவத்துல அழிஞ்சவங்களை விட ஆணவத்துல அழிஞ்சவங்க தான் அதிகம்
- யார் பா இவன் பவர் ஸ்டார் தம்பி புவர் ஸ்டார் மாதிரி இருக்கான்
- சாரி சொன்னா போயிருவோமா? அப்போ ஆளுக்கு 2 செட்டு பூரி சொன்னா போயிருவீங்களா?
- உன் பொண்டாட்டி முன்னாடி அர்னால்டு நின்னாலே அனிருத் மாதிரி தாண்டா தெரியும்
- எவன்டா அது காடைய வறுத்து கல்லால உட்கார வச்சது
- ஆளுக்கொரு போட்டோ வெச்சிக்க அவர் என்ன நயன்தாராவா டா எங்க நைனா டா
எப்படி படிச்ச உடனே சிரிப்பு வருதுல… இப்போ நாமளும் இப்படி ட்ரை பண்ணலாமா…
- என்ன நண்பா எட்டு மணிக்கே எரும தயிர் குடிச்ச எபெக்ட் இருக்கா?
- காசு இருந்தா அட்டு பிகரு கூட குட்டு பிகரா மாறிரும்
- கும்முனு இருக்குற பிகரை விட கம்முனு இருக்குற பிகர் பெஸ்ட் மச்சி
- மாங்கா வேணும்னா மார்க்கெட் போய்த்தான் ஆகணும் !
- சண்டைனா ஒட்டு கேட்க்குறதும் கைலி கிழிஞ்சா ஒட்டு போடுறதும் சகஜம் தானே
அப்புறம் என்ன பாஸ் நீங்க இப்போ சந்தானம் ஆகிட்டீங்க. செமயா கலாய்க்க ஆரம்பிங்க! வரட்டா!
சந்தானம் Mind வாய்ஸ் – என்னை கலாய்ச்சிட்டாராம்!